ஹாலிவுட்

Bautista: ஆளே மாறிப்போன WWE வீரர்; ரசிகர்கள் அதிர்ச்சி – உடல் எடை குறித்து பட்டிஸ்டா சொன்னது என்ன?

பட்டிஸ்டாவின் அடையாளமே திமிறி நிற்கும் முறுக்கேறிய அவரின் உடல்தான். எதிராளியை வீழ்த்திவிட்டு மிக தசை போஸில் வெறிகொண்டு கத்தும்போது, ​​பார்த்துக்கொண்டிருக்கும் 90″ஸ் கிட்ஸ்களுக்கும் நரம்புகள் புடைக்கும். தற்போது, ​​உடல் எடை குறைந்து ஒல்லியாக இருக்கும் பட்டிஸ்டாவின் படங்கள் வைரலானதைக் கண்டு அனைவருக்கும் அதிர்ச்சி. எதனால் உடல் எடையைக் குறைத்தார் பட்டிஸ்டாவுக்கு என்ன ஆச்சு என பலரும் கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து அதுகுறித்து பட்டிஸ்டாவே மனம் திறந்து பேசினார். அவர் தான் மிக பருமனடைந்துவிட்டதாகவும் கடின முயற்சிகளுக்குப் பின் உடல் எடையைக் குறைத்துள்ளதாகவும் யூடியூப்…

Continue Reading

ஹாலிவுட்

Selena Gomez: “குழந்தை பெற்றால் என் உயிருக்கு ஆபத்து”- கலங்கிய செலினா கோம்ஸ் |Selena Gomez reveals she can’t take his own children due to the medical issues

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் செலினா கோம்ஸ். நடிகை, பாப் பாடகி, தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் 400 மில்லியன் பாலோயர்ஸைக் கொண்ட முதல் பெண் பிரபலத்தின் பெருமையையும் பெற்றுள்ளார். தற்போது இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் பாலோயர்ஸைக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அமரிக்காவின் இளம் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது. செலினா கோம்ஸ் இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் செலினா கோம்ஸ் தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாகவும், அதனால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். Source link

ஹாலிவுட்

Jessica Alba: `அது அவர்களின் கனவு!’ – கலங்கிய பெற்றோர்; நெகிழ்ந்த ஹாலிவுட் நடிகை ஜெசிகா ஆல்பா |Actress Jessica Alba secretly buys Parents her dad’s Children home

13 வயதில் “கேம்ப் நோவரில்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’, ‘இன்டு தி ப்ளூ’ போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். போன்ற படங்களில் நடித்து ஹாலிவுட்டில் தனக்கான இடத்தை நிலைநிறுத்திக்கொண்டார். ஜெசிகா ஆல்பாநோம் கலாய் பிரபல நடிகையான இவர் தனது சிறு வயது கனவுகளை தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் அவருடைய பெற்றோருக்கு வீடு ஒன்றை வாங்கிப் பரிசாக அளித்திருக்கிறார். அதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அது அவரின் தந்தை சிறு வயதில் வசித்த வீடு. இதுதொடர்பான வீடியோக்களை…

Continue Reading

ஹாலிவுட்

Alien: Romulus Review: ஸ்பேஸில் மிரட்டும் ஏலியன்; பழைய பிரான்சைஸுக்கு உயிர்கொடுக்கிறதா இந்தப் பாகம்? | ஏலியன்: ரோமுலஸ் திரைப்பட விமர்சனம்

‘ஏலியன்’ பிரான்சைஸ் பற்றிய ஆரம்பக்கட்ட புரிதல் இருந்தாலே போதும் என்பதாகப் புரியும்படியான திரைக்கதையுடன் இதை வார்த்திருக்கும் ஃபெட் அல்வராஸுக்கு (Fede Álvarez) பாராட்டுக்கள். ஆரம்பக்கட்ட வேற்றுக்கிரகக் காட்சிகள் கடந்து விண்கலத்தில் ஏறியது தடதடக்கிறது. எப்படி ஹார டிரீட்மென்ட்டில் ஏலியன் அனைவரையும் தாக்கும் என்பதைக் கணிக்க முடிந்தாலும் அதைத் தேர்ந்த நடிப்பில் சுவாரஸ்யமான மேக்கிங்கில் அமர்க்களப்படுத்தியிருக்கிறது படக்குழு. குறிப்பாக ‘ஜீரோ கிராவிட்டி’யில் நடக்கும் ரணகள க்ளைமாக்ஸ் அட்டகாசமான மேக்கிங். ஆங்காங்கே வரும் டெக்னிக்கல் ஐடியாக்களும் காட்சிகளுக்கு வலுசேர்த்துள்ளன. அதே சமயம், இதே வழிமுறையில் இன்னும் எத்தனை…

Continue Reading

ஹாலிவுட்

பென் அஃப்லெக் – ஜெனிபர் லோபஸ்: ரூ.500 கோடி அரண்மனை; இரண்டாம் ஆண்டு திருமண நாள்; விவாகரத்து முடிவா?|Jennifer Lopez files for divorce from Ben Affleck after two years of marriage

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் பென் அஃப்லெக். ‘பியர்ல் ஹார்பர்’, ‘ஆர்கோ’, ‘கான் கேர்ள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், குறிப்பாக 2016ஆம் ஆண்டு பேட்மேன் vs சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் படத்தில் பேட்மேனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். பென் அஃப்லெக் – ஜெனிபர் லோபஸ் அதேபோல “அனகொண்டா’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் ஜெனிபர் லோபஸ். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘தி மதர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. AI டெக்னாலஜியை வில்லனாக்கி அட்லஸ் படத்திலும் நடித்திருந்தார். கடந்த…

Continue Reading

ஹாலிவுட்

Marvel At D23 2024: மார்வெல் கொண்டாட்டம்; MCU-வின் அடுத்தடுத்த படங்களின் அசத்தல் அறிவிப்புகள்!

டிஸ்னியின் ஒரு முக்கிய, மிகப்பெரிய அங்கமாக மாறியுள்ள மார்வெல் ஸ்டூடியோஸ் அடுத்து வெளிவரவிருக்கும் தனது படைப்புகளின் டீசர்களை டிஸ்னியின் ஃபேன்ஸ் ஈவென்ட் ஆன D23-ல் திரையிட்டுள்ளது. முன்னதாக நடந்து முடித்த சான் டியாகோ காமிக் கானில் மார்வெல் தரப்பில் பெரிய படங்களின் அறிவிப்பு மட்டுமே வெளியானது. தற்போது நடந்து முடிந்திருக்கும் D-23 எக்ஸ்போவில் சிறிய புரஜெக்ட் முதல் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள படங்கள் வரை பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. முதலாவதாக, முன்பு வெளியான ‘வாண்டா விஷன்’ தொடரின் ஸ்பின் ஆஃப் தொடரான ​​’அகதா ஆல்…

Continue Reading

ஹாலிவுட்

HBD Christopher Nolan: ஹாலிவுட்டின் மாய வித்தகன் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் குறித்த 15 தகவல்கள்! | இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகள்

5. 2019-ம் ஆண்டுதான் கருந்துளையின் (Black hole) முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டார். ஆனால் நோலன் 2014-ல் வெளியான தன்னுடைய ‘இன்டர்ஸ்டெல்லர்’ படத்திலேயே கருந்துளையைக் காட்சிப்படுத்தியிருப்பார். 6. கிப் ட்ரோன் என்னும் ஈர்ப்பு இயற்பியல் மற்றும் வானியற்பியல் அறிவியலாளர் நோலனுக்கு இன்டர்ஸ்டெல்லார் படத்தில் உதவியிருப்பார். இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இத்துறைகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றார். 7. ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் எடுத்த ‘கஜினி’ உண்மையில் நோலனின் ‘மெமன்ட்டோ’ படத்தின் கூறுகளைக் கொண்ட தழுவலாகும். 8. நோலன் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை…

Continue Reading

ஹாலிவுட்

`வில்லனாக முன்னாடி வந்து நின்னா…’ – MCUல் ரீ-என்ட்ரி கொடுக்கும் ராபர்ட் டௌனி ஜூனியர்!

பிரபல ஹாலிவுட் நடிகரான ராபர்ட் டௌனி ஜூனியர் 2008-ம் ஆண்டு வெளியான ‘அயர்ன் மேன்’ படத்தின் மூலம் தனது மார்வெல் பயணத்தைத் தொடங்கினார். ‘அயர்ன் மேன் 2 (2009)’, ‘தி அவெஞ்சர்ஸ் (2012)’, ‘அயர்ன் மேன் 3 (2013)’, ‘அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் ஆல்ட்ரான் (2015)’, ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)’, ‘ஸ்பைடர் -மேன்: ஹோம்கம்மிங் (2017)’, ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டிவார் (2018)’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)’ போன்ற திரைப்படங்களில் பிரபல பணக்காரராக, கிட்டத்தட்ட எலான் மஸ்க் போன்றதொரு கதாபாத்திரமான டோனி ஸ்டார்க்…

Continue Reading

ஹாலிவுட்

Deadpool & Wolverine Review: `இது லிஸ்ட்லயே இல்லயே’ கேமியோக்களும், அசத்தும் இரு சூப்பர்ஹீரோக்களும்! | டெட்பூல் மற்றும் வால்வரின் விமர்சனம்: வேட் வில்சனின் பிளேடு மற்றும் லோகனின் நகங்கள் பிரபஞ்சத்தை காப்பாற்றின

ஒரு கட்டத்தில் இது டெட்பூலை MCU-வில் கொண்டு வரும் முயற்சி என்பதையெல்லாம் கடந்து, இது படம் என்பதை மறந்து தயாரிப்பு நிறுவனங்களைக் கலாய்த்துத் தள்ளும் ரோஸ்டாக மாறிவிடுவது புதுமையான திரை அனுபவம். தயாரிப்பு நிறுவனங்களுக்குள் இருக்கும் ரைட்ஸ் பிரச்னை, அவர்களின் பட்ஜெட் பிரச்னை, சென்சார் ரேட்டிங் பிரச்னை என ஒன்றையும் விட்டுவைக்காமல் கலாய்த்துத் தள்ளியிருக்கிறது இயக்குநர் ஷான் லெவி, ராயன் ரெனால்ட்ஸ் அடங்கிய எழுத்து! டைம் டிராவல் போன்ற விஷயங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதையெல்லாம் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி அதிகம் குழப்பம் ஏற்படாமல் நகர்த்தியிருக்கும் விதமும்…

Continue Reading