க்ரைம்

சென்னையில் சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது | சென்னையில் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சென்னை: சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய விவகாரத்தில் தெலங்கானாவைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழ்மையை பயன்படுத்தி சென்னையில் சிறுமிகள், பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பல் ஒன்று தள்ளி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். ரகசிய தகவலின்படி கடந்த மே 17-ம் தேதி வளசரவாக்கம் ஜெய் நகரில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்டது…

Continue Reading

க்ரைம்

ஐகோர்ட் தடையாணை பெற்றது போல போலி உத்தரவு தயாரித்து மோசடி: மூவருக்கு 6 மாதம் சிறை | நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டது போல் போலி உத்தரவு பிறப்பித்து மோசடி: மூன்று பேருக்கு 6 மாதம் சிறை

சென்னை: உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது போல போலி உத்தரவு தயாரித்து மோசடி செய்த வழக்கில், மூன்று பேருக்கு ஆறு சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் ஆகியோர் வசித்து வந்தனர். அவ்விடத்தை இவர்கள் காலி செய்யாததால் அறக்கட்டளை நிர்வாகியான செந்தாமரை, நாமக்கல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் செந்தாமரைக்கு சாதகமாக நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நீதிமன்ற ஊழியர்கள் அவர்களை காலி செய்ய…

Continue Reading

க்ரைம்

சென்னையில் சிம் கார்டுகளை சட்ட விரோதமாக பயன்படுத்திய கால் சென்டரில் உபகரணங்கள் பறிமுதல் | சென்னை: சிம் கார்டுகளை முறைகேடாகப் பயன்படுத்திய அழைப்பு மையம் கண்டறியப்பட்டது – சிறப்புப் படை அமைப்பு

சென்னை: சென்னையில் சிம்கார்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்திய கால் சென்டரை உளவுப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். தலைமறைவாக உள்ள அதன் நிர்வாகிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் 5 ஆண்டுகளாக தனியார் கால் சென்டர் வருகிறது. இதில் சுமார் 800 பேர் பணியாற்றுகின்றனர். முன்னணி தனியார் வங்கிகளில் கிரெடிட் கார்டு, தனி நபர் கடன் பெற்ற வாடிக்கையாளர்களை திருப்பி இந்த நிறுவனத்தினர் தொடர்பு கொண்டு கடன்களை செலுத்தும்படி அறிவுறுத்துவார்கள். இந்நிலையில், இந்நிறுவனத்தினர் மத்திய அரசின்…

Continue Reading

க்ரைம்

திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் மேலும் 3 பேர் உயிரிழப்பு | திண்டுக்கல் விபத்து: 3 பேர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த நத்தம் அருகே தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டை-முடக்குச் சாலையில் இன்று (வியாழக்கிழமை) காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு தனியார் பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் பைக்கில் வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கீழே விழுந்து…

Continue Reading

க்ரைம்

சென்னை | மதுபோதையில் தகராறு: கணவரை கொலை செய்த மனைவி கைது | கணவனை கொலை செய்த மனைவி கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில், 3-வது கணவரை தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தமனைவியை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவல்லிக்கேணி அசதிக்கான் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் கூலி வேலை செய்து வந்தார். திருவல்லிக்கேணி காந்திநகர், பல்லவன் சாலை பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (34). இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். நாகம்மாள் ஏற்கனவே 2 திருமணங்கள் செய்து, கருத்துவேறுபாடு காரணமாக இரு கணவர்களையும் விட்டு பிரிந்தார். மணிவண்ணன் தன்னை விட இளையவராக…

Continue Reading

க்ரைம்

திருவெண்ணெய்நல்லூரில் ரூ.1.80 லட்சம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது | லஞ்சம் வாங்கிய திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் கைது

விழுப்புரம்/சிவகங்கை: வீட்டுமனை பதிவுக்கு தடையின்மைச் சான்றிதழ் வழங்க ரூ.1.80 லட்சம் லஞ்சம் வாங்கிய திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டு மனைப் பிரிவில், சில வீட்டு மனைகளை வாங்குவது தொடர்பாக சார் பதிவாளர் அலுவலகம் சென்றார். அங்கு, நிலத்தை பதிவு செய்ய முடியாத வகையில் பேரூராட்சி செயல் அலுவலர் மூலம் தடை மனு கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிசெயல்…

Continue Reading

க்ரைம்

கிருஷ்ணகிரி பாலியல் அத்துமீறல் வழக்கில் கைதான போலி என்சிசி பயிற்சியாளர் மீது பண மோசடி புகார்! | பர்கூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட போலி என்சிசி மாஸ்டர் மீது பணமோசடி புகார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் போலி பயிற்சி முகாம் நடத்தி, 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், தன்னை வழக்கறிஞர் எனக் கூறி ரூ.36 லட்சம் பணம் பறித்ததாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் 12 வயதுடைய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், போலி என்சிசி பயிற்சியாளருமான சிவராமன் போக்சோ…

Continue Reading

க்ரைம்

ஆவின் பால் பண்ணையில் இயந்திரத்தில் சிக்கி பெண் ஊழியர் உயிரிழப்பு – திருவள்ளூர் அருகே அதிர்ச்சி | திருவள்ளூர் அருகே ஆவின் பால் பண்ணையில் இயந்திரத்தில் சிக்கி பெண் ஊழியர் உயிரிழந்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காக்களூர் ஆவின் பால் பண்ணையில் இயந்திரத்தில் சிக்கி பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவள்ளூர் அருகே காக்களூரில் ஆவின் பால் பண்ணை வருகிறது. இங்கிருந்து, நாள்தோறும் சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வழக்கம்போல், முகவர்களுக்கு பால் அனுப்பும் பணி நடந்தது. அப்பணியில், தரம் பிரித்து, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் நிரப்பப்பட்ட பால் இயந்திரத்தில் இருந்து, கன்வேயர் பெல்ட்டில் வெளியே…

Continue Reading

க்ரைம்

ம.பி. கிராமங்களில் திருட்டு, கொள்ளை பற்றி சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கும்பல்: ரூ.3 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார் | கிராமங்களில் திருட்டு மற்றும் கொள்ளை பற்றி சிறுவர்களுக்கு எம்.பி கும்பல்கள் பயிற்சி அளிக்கின்றனர்

போபால்: மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து சுமார் 117 கி.மீ. தொலைவில், ராஜ்கர் மாவட்டத்தில் காடியா, குல்கேடி, ஹல்கேடி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பிக்பாக்கெட், வழிப்பறி, கூட்டமான இடங்களில் பைகளை பறிப்பது, வேகமாக ஓடுவது, போலீசாரை ஏமாற்றுவது, பிடிபட்டால் தாக்குதலை சமாளிப்பது என சகல பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்காகரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரைகட்டணமாக ஒரு கும்பல் வசூல் செய்கிறது. ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு அந்தக் கும்பலின் தலைவரிடமிருந்து சிறுவர்களின் பெற்றோருக்கு ஆண்டுக்கு…

Continue Reading

க்ரைம்

சென்னை | தோழி வீட்டில் தங்கியிருந்த ரவுடி கொலை: முன்விரோதத்தால் கொலை செய்த 5 பேர் கைது | நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்த ரவுடி கொல்லப்பட்டார்

சென்னை: தலையில் கல்லைப்போட்டு ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அம்பத்தூர், காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆசைதம்பி (36). இவர் எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றிருந்தார். வியாசர்பாடி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி, பி.வி.காலனியில் அவரது பெண் தோழி வீட்டில் தங்கினார். நள்ளிரவில் அங்கு வந்த 7 பேர்…

Continue Reading