செங்குன்றம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறை கைதி ஒருவர் பலனின்றி உயிரிழந்த சம்பவம், சிகிச்சையை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (45). இவர் வண்டலூர் அருகே நடந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாலாஜியின் உடல்நிலை, சிறையில் மேலும் மோசமானது என தெரிகிறது. இந்நிலையில், பாலாஜியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு…
Category: க்ரைம்
ராணுவ வீரரின் தங்க ஆபரணங்கள் அடங்கிய பை திருட்டு: பிஹாரை சேர்ந்த இருவர் கைது | இராணுவ வீரர்களின் தங்க ஆபரணங்களை திருடிய இருவர் கைது!
சென்னை: துரந்தோ விரைவு ரயிலில் ராணுவ வீரர் தவறவிட்ட 12 சவரன் தங்க ஆபரணங்கள் அடங்கிய பையை ஒப்படைக்காமல், திருடிய பிஹார் இளைஞர்கள் இருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் மவுலீஸ்வரன். இவர், பஞ்சாயத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர், பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக, தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வர முடிவு செய்தார். அதன்படி, டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு துரந்தோ விரைவு ரயிலில் கடந்த 11-ம் தேதி குடும்பத்தினருடன் வந்தார். பின்னர், மற்றொரு ரயிலில்…
சென்னை | உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதை பொருளாக விற்ற மணிப்பூர் பெண் கைது | வலி நிவாரண மாத்திரைகளை போதைப்பொருளாக விற்ற மணிப்பூர் பெண் கைது
சென்னை: வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனை செய்த மணிப்பூர் பெண் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8,100 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, திருவான்மியூர் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த பெண்ணை விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில்…
சென்னை | தங்கை மீதான பாசத்தால் கொலை: ஆட்டோ ஓட்டுநர் கைது | ஆட்டோ டிரைவர் கைது
சென்னை: தங்கையை தாக்கியதால் அவரது கணவரை, ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை செய்த சம்பவம் ஆர்.கே.நகரில் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அஜய் (29). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இத்தம்பதி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. அப்போது, அஜய் தனது மனைவியை அடித்து உதைப்பது வழக்கம். இதுகுறித்து பிரியா, தனது அண்ணனான தண்டையார்பேட்டையில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் அன்புச்செல்வனிடம் (31) கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தம்பதியிடையே வாக்குவாதம்…
சென்னை | சமரசம் செய்ய லஞ்சம் பெற்ற பெண் எஸ்ஐ-க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை | பெண் எஸ்ஐக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சென்னை: சமரசம் செய்ய லஞ்சம் பெற்ற பெண் எஸ்ஐ-க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் செல்வராஜன், கட்டுமானப் பணிக்காக திருவான்மியூரைச் சேர்ந்த அழகேசன் என்பவரிடம் மணல் வாங்கியுள்ளார். இந்த தொகையை வழங்குவதில் இருவருக்கு மிடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த 2013-ல் செல்வராஜன் வீட்டுக்குச் சென்ற அழகேசன், அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. செல்வ ராஜன் வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். புகாரை விசாரித்த அப்போதைய வேளச்சேரி எஸ்ஐ…
புகார் வாங்க மறுத்த ஆர்.கே.நகர் போலீஸாரை கண்டித்து காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு | ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன் தீ விபத்தில் தொழிலாளி பலி
சென்னை: புகார் வாங்க மறுத்த போலீஸாரை கண்டித்து காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஸ்டீல் பட்டறை தொழிலாளி உயிரிழந்தார். சென்னை புளியந்தோப்பு, திருவிக நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (42). கொருக்குப்பேட்டையில் சொந்தமாக ஸ்டீல் பட்டறை நடத்தி வந்தார். தொழில் நஷ்டத்தால் அதை மூடிவிட்டு, கொருக்குப்பேட்டை, அண்ணாநகர் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான ஸ்டீல் பட்டறையில் கடந்த 3 நாட்களாக கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பட்டறையில் பணி செய்து வந்த சக பணியாளரான கொருக்குப்பேட்டை, பாரதி நகர்…
மங்களூரு கூட்டுறவு வங்கியில் கொள்ளை: நெல்லையைச் சேர்ந்த 2 பேர் கைது; 2 கிலோ நகைகள் பறிமுதல் | மங்களூர் கூட்டுறவு வங்கியில் கொள்ளை
கர்நாடக மாநிலம் மங்களூரு கூட்டுறவு வங்கியில் கொள்ளையடித்த, நெல்லையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 2 கிலோ தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம், 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம் மங்களூரு அருகேயுள்ள உல்லால் பகுதியில் செயல்பட்டு வரும் கோட்டேகார் கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த 17-ம் தேதி நுழைந்த முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். விசாரணையில், ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர், உ.பி.யைச் சேர்ந்த…
‘சைபர் கிரைம்’ மோசடியாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கித் தரும் நபர்கள் – போலீஸ் எச்சரிக்கை | கோவையில் சைபர் கிரைம் மோசடி செய்பவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் நபர்கள்
கோவை: கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, சைபர் கிரைம் மோசடி செய்பவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கி தந்து, மோசடிக்கு உடந்தையாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரித்துவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப, சமீபத்திய நாட்களாக சைபர் கிரைம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு கோவை மாநகரில், சைபர் கிரைம் மோசடிகள் தொடர்பாக 8,254 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 300 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.93.95 கோடி மர்ம நபர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, சைபர் கிரைம் மோசடிகள் தொடர்பாக…
சென்னை | ஹவாலா பணம் குறித்து விசாரித்தபோது போலீஸாரை மிரட்டிய இரண்டு பேர் கைது | போலீசாரை மிரட்டிய இருவர் கைது
சென்னை: ஹவாலா பணம் குறித்து விசாரித்தபோது, போலீஸாரை மிரட்டியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை மேற்கு மாம்பலம் ஆர்ய கவுடா சாலையில் அசோக் நகர் போலீஸார் கடந்த 19-ஆம் தேதி இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில், கையில் பையுடன் இருவர் நின்றிருந்தனர். அதை கவனித்த போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த கைப்பையை வாங்கி சோதனையிட்டனர். அப்போது, அதில்…
சென்னை | தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் அறுத்து பெண் காவலர் காயம் | சென்னையில் மாஞ்சா நூல் அறுந்து பெண் காவலர் படுகாயம்
சென்னை: சென்னை அண்ணாநகரில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் அறுத்து பெண் காவலர் பலத்தக் காயமடைந்தார். புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ரம்யா (26). அமைந்தகரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் மொபெட்டில் அமைந்தகரை காவல் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அண்ணாநகர் மேம்பாலத்தில் செல்லும்போது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் ரம்யா கழுத்தில் சிக்கி அறுந்தது. அவர், நிலை தடுமாறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு அருகில் உள்ள…