கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: இந்தியா


டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மழை வந்து, அரையிறுதிப் போட்டியை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. போட்டியின் 2வது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதன் மூலம் 2022 டி20 உலகக் கோப்பையின் காட்சி மீண்டும் நினைவுக்கு வருகிறது. அப்போது இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போதைய தொடரில் தோல்வியைச் சந்திக்காத இந்திய அணி, இங்கிலாந்தை பழிவாங்கும் முடிவில் உள்ளது.

விளம்பரம்

ஜூன் 27 வியாழக்கிழமை அன்று கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இருப்பினும், அரையிறுதி நாளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழையால் ஆட்டம் ரத்தாகும் அபாயம் உள்ளது. மேலும், போட்டி ரத்து செய்யப்பட்டால், எந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்? எப்படி அறிவிக்கப்படும்? என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது.

இதையும் படிக்க:
5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்… ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணி அறிவிப்பு

விளம்பரம்

வானிலை அறிக்கை என்ன?

அக்யூவேதர் வானிலை அறிக்கையின்படி, ஜூன் 27 அன்று கயானாவில் மழைக்கான வாய்ப்பு 88% மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு 18% உள்ளது. அரையிறுதி ஆட்டம் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால், சூப்பர் 8 பிரிவு குழுவில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா, டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு நேரடியாகச் செல்லும். போட்டி முழுமையாக நடைபெறவில்லை என்றால் மட்டுமே இந்திய அணிக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.

விளம்பரம்

ரிசர்வ் டே உள்ளதா?

ஜூன் 26ஆம் தேதி டிரினிடாட்டில் முதல் அரையிறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே உள்ளது. அது ஒரு இரவுப் போட்டி. எனவே போட்டி ரத்து செய்யப்பட்டால், அடுத்த நாள் பகலில் ஆட்டம் நடைபெறும். இருப்பினும் ஜூன் 27ஆம் தேதி கயானாவில் நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே இல்லை. ஆனால், இது பகல் நேரப் போட்டி என்பதால், வாஷ் அவுட் ஆகும் பட்சத்தில் முடிவை அறிய கூடுதலாக 2.30 மணி நேரம் ஒதுக்கப்படும். அதற்குள் போட்டியை நடத்த முடியாவிட்டால், அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும்.

விளம்பரம்

இரண்டாவது அரையிறுதிக்கு ரிசர்வ் டே இருந்தால், மழையால் பாதிக்கப்பட்ட போட்டி மறுநாள் நடைபெற உள்ளது. அதில் வெற்றிபெறும் அணி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும். இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெறுகிறது. ரிசர்வ் டே இருந்தால், இவ்வளவு குறுகிய காலத்தில் இன்னொரு முக்கியமான போட்டியை இந்தியா அல்லது இங்கிலாந்து விளையாடுவது கடினம்.

ஜூன் 29 சனிக்கிழமையன்று பார்படாஸில் இறுதிப் போட்டிக்கான பயணமும் இருக்கும். அதனால்தான், ஷெட்யூல் அமைக்கப்படாததால், இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே இல்லை.

விளம்பரம்

.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *