சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சூரியனின் பெயர்ச்சியின் அடிப்படையில் தான் தமிழ் மாதங்கள் மற்றும் தமிழ் ஆண்டு பிறப்பு கணக்கிடப்படுகிறது. தமிழ் வருடத்தின் ஆறாவது மாதமான புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி ஆகிறார். இதுவரை தனது சொந்த வீடான சிம்ம ராசியில் ஆட்சியாக இந்த சூரியன் தற்பொழுது புதனின் வீடான கன்னிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே கன்னி ராசியில் புதன் உச்சம் பெற்று இருந்தாலும், வக்கிரமாகி அமர்ந்துள்ளார். இதைத் தவிர, வேறு எந்த பெரிய கிரக மாற்றங்களும் இந்த மாதம் இல்லை. புரட்டாசி மாதத்தில் யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
சூரிய பகவான் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னிக்கு பெயர்ச்சியாகிறார்.
செப்டம்பர் 10 ஆம் தேதி புதன் தனது உச்ச வீடான கன்னியில் வக்கிரமாகி, அக்டோபர் 2 ஆம் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
செப்டம்பர் 24 ஆம் தேதி, சுக்ரன் சிம்மத்தில் இருந்து கன்னியில், சூரியன் மற்றும் புதனுடன் இணைகிறார். கன்னியில் சுக்ரன் நீச்சம் அடைந்தாலும், ராசிநாதன் உச்சம் பெறுவதால், நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார்.
ரிஷப ராசி – பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், மன உளைச்சல் அதிகரிக்கும்
கடந்த சில நாட்களாக ரிஷப ராசிக்கு மந்தமான சூழல் நிலவி வருகிறது. இப்பொழுது சூரியன் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனின் பெயர்ச்சியும் அந்த அளவுக்கு சாதகமாக இல்லை. பெரிதாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் புதிதாக எதையும் தொடங்க வேண்டாம். காரணம் இல்லாமல் மன உளைச்சலும் தேவையில்லாத பிரச்சனைகளும் ஏற்படும். எனவே நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவுகள் நீடித்திருக்கும். புதன் வக்கிர நிவர்த்தி பெற்றால் போதும், சுக்ரன் கன்னிராசியில் பெயர்ச்சியாகும் வரையிலும் கொஞ்சம் பொறுமை காக்கவும்.
துலாம் ராசி – விரைய ஸ்தானத்தில் சூரியன், செலவுகளை தவிர்க்க வேண்டும்
துலாம் ராசிக்கு 12 ஆம் தேதி வீடான விரைய ஸ்தானம், அதாவது அதிக செலவுகள் வைக்கும் வீட்டுக்கு சூரியன் பெயர்ச்சி ஆகிறது. எனவே, செலவுகள் கட்டுக்கடங்காது. புரட்டாசி மாதம் முழுவதும் செலவுகளை ஒவ்வொன்றாக திட்டமிட்டு, தேவையில்லாத செலவுகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள் அல்லது தள்ளிப்போடுங்கள். வணிகத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம். புதிய அல்லது பெரிய திட்டங்கள் எதையும் இப்போது செய்ய வேண்டாம். குடும்பத்தில், மூத்த சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ராசிநாதன் சுக்ரனும் 12 ஆம் வீட்டில் மறைவதால், நிதானமும், அமைதியும் தேவை.
கும்ப ராசி – அஷ்டமத்தில் சூரியன், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம்
கும்பராசிக்கு ஏற்கனவே ஏழரை சனி தொடங்கி, சனி மகரத்தில் வக்கிரமாக இருக்கும் நிலையில் ஏழாம் வீட்டில் அதிபதியான சூரியன் அஷ்டமத்திற்கு பெயர்ச்சியாவது மிகவும் கடினமான கால கட்டமாக இருக்கும். நீங்கள் செய்ய முடியாமல் தடங்கல் ஏற்பட்டு, உங்களை அலைகழிக்க வைக்கும். உதாரணமாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தாமதமாகலாம். புதிய தொழில் தொடங்க அல்லது விரிவாக்க நினைப்பவர்கள் சிறிது காலத்திற்கு அதை தள்ளிப்போடலாம். திருமணம் ஆனவர்கள் மற்றும் கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் நிதானமாக செயல்பட வேண்டிய காலமிது. ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை. தலை மற்றும் வயிறு சம்மந்தமான கோளாறுகள் ஏற்படும். ஏற்கனவே உடல் நல பாதிப்புகள் இருப்பவர்கள், அலட்சியமாக இருக்க வேண்டாம்.
மீன ராசி – களத்திர ஸ்தானத்தில் சூரியன், விட்டுக் கொடுத்து போவது நல்லது
மீன ராசிக்கு ஏழாம் வீடான கன்னி ராசியில் களத்திர ஸ்தானத்தில் சூரியன் பெயர்ச்சியாகிறார். ஏழாம் வீடு என்பது திருமணம், கூட்டு தொழில், கூட்டாளர்கள் ஆகியவற்றைக் குறிக்கும். இந்த இடத்தில் சூரியனின் பெயர்ச்சி, திருமண உறவில் விரிசல், கருத்து வேறுபாடு, வாக்குவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது. எனவே கணவன் அல்லது மனைவி எதைச் சொன்னாலும் கொஞ்சம் அமைதியாக விட்டுக் கொடுத்து செல்வதும் திருமண வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். அதேபோல கூட்டுத் தொழில் செய்பவர்கள் அகலக்கால் வைக்காமல் செயல்படலாம். கூட்டாளர்களுடன் ஏதேனும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. புதிய முடிவுகள் புரட்டாசி மாதம் எடுக்காமல் அடுத்த மாதம் வரை தள்ளிப் போடலாம். ஆனால் சுக்ரன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆன பிறகு, இந்த நிலைமை கொஞ்சம் சுமூகமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .