சினிமா

விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல் கொல மாசாக வெளியான ‘துருவ நட்சத்திரம்’ பட அப்டேட்.! – மக்கள் மீடியா-தமிழ்ச் செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | தமிழ் செய்திகள் நேரலை | தமிழ்நாடு செய்திகள் | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்



சினிமா செய்திகள்

விக்ரம்,துருவ நட்சத்திரம்

ஏப். 21, 2023

1158

0

விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல் கொல மாசாக வெளியான 'துருவ நட்சத்திரம்' பட அப்டேட்.!

விக்ரம் தனது 57வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு விக்ரம் நடிக்கும் படங்களின் அப்டேட்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அந்த வகையில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆதித்ய கரிகாலனாக நடித்திருந்தார் விக்ரம். இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ரிலீஸ் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் தற்போது ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரமின் 61வது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் கே.ஜி.எப் பற்றிய உண்மையான வரலாற்றை சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் பிரம்மாண்டமாக ‘தங்கலான்’ உருவாகி வருகிறது. தற்போது விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஹாப்பி பர்த்தே சீப்’ என குறிப்பிடப்பட்டுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஸ்டைலிஷான போஸ்டர் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *