லக்னோ அணியின் அபாரமான பந்து வீச்சைக்குப் பிடிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி 144 ரன்னில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் ஏகனா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர்.
இன்று பிறந்த நாள் காணும் ரோஹித் சர்மா 5 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 10 ரன்னிலும், திலக் வர்மா 7 ரன்னிலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகி வெளியேறினர்.
இதனால் 5.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 27 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் இணைந்த இஷான் கிஷன் – நெஹல் வதேரா இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது.
இஷான் கிஷன் 32 ரன்களில் ஆட்டமிழக்க, நெஹல் வதேரா 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 18 பந்துகளில் 1 சிக்சர் 3 பவுண்டரியுடன் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
.