தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன்.. திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி



கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தி18

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ஞானசேகரன் போனில், “சார்” என குறிப்பிட்டதாகவும், இதனால் யார் அந்த சார் என்ற சர்ச்சையும் வெடித்தது. தமிழக சட்டசபையிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 3 பெண் காவல் அதிகாரிகள் சிறப்பு குழுவை நியமித்தது. சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கோட்டூர்புரம் போலீசாரிடம் இருந்த ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கினர்.

மேலும் ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். மாஜிஸ்திரேட் சுப்பிரமணியன் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி ஞானசேகரனிடம் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 20-ந்தேதி மாலை ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அழைத்துச் சென்றனர்.

காவலில் எடுக்கப்பட்டுள்ள ஞானசேகரனிடம் நேற்று இரவு எழும்பூர் காவல் நிலையத்தில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின் நேற்று அதிகாலையில் அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்திற்கு ஞானசேகரன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அண்ணா நகர் துணை ஆணையர் சினேக பிரியா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசார் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஞானசேகரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸ் காவலில் இருந்த ஞானசேகரனுக்கு இன்று அதிகாலையில் வலிப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் காவலில் ஞானசேகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அண்ணாநகர் காவல் துணை ஆணையர் சினேக பிரியா, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், ஞானசேகரனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஒரு நாள் முழுவதும் போலீஸ் காவலில் ஞானசேகரன் இருந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து ஏராளமான விவரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு சிகிச்சை முடிந்தது மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன்.. திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *