இந்தக் காலக்கெடுவிற்குள் பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில், நிலுவைத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டி இருக்கும். மேலும், பேமெண்ட் நாளுக்கு முன்பாகவே நிலுவைத் தொகையைச் செலுத்தினால், எந்த வட்டியும் விதிக்கப்படாது. கூடுதலாக, பல கிரெடிட் கார்டுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி கார்டுகளுடன் வருகின்றன, இது பிரபலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது.
அனைத்து வங்கிகளுமே, அந்த குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்டு கட்டணமில்லா இலவச கார்டுகளும் விநியோகிக்கப்படுகின்றன. மேலும், குறிப்பிட்ட தொகையில் கட்டணம் வசூலிக்கப்படும் குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பட்சத்தில், மாதக் கட்டணத்தில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறாக, கட்டணமில்லா கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது அல்லது கட்டணமில்லா கிரெடிட் கார்டை மிகவும் குறைந்ததாக மாற்றுவதற்கான எளிதான வழிகளைப் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
சரியான கார்டைத் தேர்ந்தெடுத்தல்: அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் கட்டணங்கள் விதிக்கப்படுவதில்லை. அதிலும், தற்போதைய நடைமுறை பல வங்கிகள் மற்றும் கடன் வழங்குநர்கள் வாழ்நாள் முழுவதும் கட்டணம் இல்லை இலவச கார்டுகளை வழங்குகிறார்கள். அதே நேரத்தில், கட்டணம் செலுத்த வேண்டிய கார்டைப் பயன்படுத்தி நீங்கள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவு செய்வதன் மூலம், கட்டண தள்ளுபடியையும் பெறலாம்.
எனவே, உங்கள் செலவுகளுக்கு ஏற்ற சரியான மற்றும் நல்ல சலுகைகளை வழங்கும் கிரெடிட் கார்டுகளைத் தேர்வு செய்வது நல்லது.
ரிவார்டு பாய்ண்டுகளைப் பயன்படுத்துதல்: சில நேரங்களில், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், நீங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தி, ஒரு நல்ல லோன் வரலாற்றைக் கொண்ட வாடிக்கையாளராக இருந்தால், நல்லெண்ண அடிப்படையில் வங்கிகள் உங்களது கட்டணத்தைத் தாமாகவே தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், இந்த கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய நீங்கள் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
மேலும், சில கிரெடிட் கார்டுகள் செலவழிக்கப்படும் தொகைக்கு ஏற்ப ரிவார்டு பைண்டுகளை வழங்கும். இந்த ரிவார்டு பாய்ண்டுகளைப் பயன்படுத்தியும் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய முடியும்.
குறிப்பிட்ட தொகையைச் செலவிடுதல்: ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட ஒரு தொகையைச் செலவு செய்தால், பல கிரெடிட் கார்டு வழங்குநர்கள் மாதக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்கிறார்கள்.
எனவே, நீங்கள் தற்போது பயன்படுத்தி வரும் கிரெடிட் கார்டு, உங்களது தேவைகளுக்கு ஏற்றவாறு இல்லை என்றால், அதிக நன்மைகள் அல்லது ரிவார்டு பாயிண்ட்களை வழங்குவது மற்றும் குறைந்த வருவா கட்டணங்களைக் கொண்ட கிரெடிட் கார்டை வாங்குவது சிறந்தது.
இவ்வாறாக, கிரெடிட் கார்டின் அதிகபட்ச நன்மைகளைப் பெற, செலவுகளை அதிகப்படுத்தி நிதி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
ஜனவரி 22, 2025 5:55 PM IST
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்.. மாத கட்டணங்களை தவிர்க்க உதவும் 3 எளிய வழிகள் இதோ!