வணிகம்

கைகொடுத்த பருவமழை.. தமிழகத்தில் அரிசி விலை குறைகிறது.. கிலோவுக்கு எவ்வளவு தெரியுமா?



தமிழகத்தில் நெல் அறுவடையானது பொதுவாக சம்பா, குறுவை என இரண்டு போகங்களாக நடைபெறுகிறது. இதில் சம்பா சாகுபடியில் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். சம்பா அறுவடையில் 75 சதவீத விளைச்சலும், குறுவை சாகுபடியில் 25 சதவீதம் விளைச்சலும் கிடைக்கும். கடந்த 2023ம் ஆண்டு பருவ மழை பொழிவு ஏமாற்றத்தால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. இந்தியா முழுவதும் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் உற்பத்தியானது வழக்கத்தை விட 3.7 சதவீதம் குறைந்தது.

உற்பத்தி குறைவின் காரணமாக சன்னரக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அரிசி விலை கடும் ஏற்றம் கண்டது. இதற்கிடையே தான், 2024ல் இரண்டு பருவமழைகளும் எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ததால் நெல் விளைச்சலும் அதிகமானது.

குறுவை சாகுபடியில் நல்ல விளைச்சல் கிடைத்த நிலையில், சம்பா சாகுபடியும் தற்போது தமிழகத்தில் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சம்பா சாகுபடி விளைச்சல் குறையும் என தெரிகிறது.

தமிழகத்தில் தான் இந்த நிலை. ஆனால், நெல் விளைச்சல் இருக்க கூடிய மற்ற மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய விளைச்சல் நன்றாக உள்ளது. இந்தியாவில் வழக்கமாக 130 மில்லியன் டன் உற்பத்தி இருக்கும் நிலையில், அது 140 மில்லியன் டன் அளவுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

இதனை கணித்தே அரிசி ஏற்றுமதிக்கான தடையை நீக்கியும், சுங்க வரியை நீக்கியும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் | Gold Rate: வரலாற்றில் முதல் முறையாக ரூ.60,000-ஐ தாண்டிய தங்கம்… ஒரே நாளில் எகிறிய விலை! – இன்றைய நிலவரம் என்ன?

விளைச்சல் அதிகரிப்பால் 60 கிலோ நெல் மூட்டை ரூ.1400 முதல் ரூ.1500 வரை விற்பனை ஆகிறது. அதுவே, 2023ல் ரூ.1700 முதல் ரூ.1800 வரை இருந்தது. தற்போது நெல் குறைந்திருப்பதால் அரிசி விலையும் மிகவும் குறையும் என்று வணிகர்கள் விலை.

அதன்படி அரிசி விலை ரூ.2 முதல் ரூ.3 வரை விற்பனை செய்யப்படலாம் என்றும், பிப்ரவரி மாதத்தில் இருந்து அரிசி விலை குறைவு அமலுக்கு வரலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், விலைச்சல் அதிகரிப்பால் வரும் ஆகஸ்ட் மாதம் வரை அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் வணிகர்கள் பதிவு செய்கிறார்கள்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *