கிரிக்கெட்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்



கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 24 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 13 போட்டிகளிலும், இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

செய்தி18

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தோல்விக்குப் பிறகு இந்திய அணி கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் விமர்சனங்களுக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க கடுமையாக போராடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 24 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 13 போட்டிகளிலும், இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

டி20 தொடருக்கான இந்திய அணி – சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, வாஷி பிஷ்னாய், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்)

இதையும் படிங்க – நீரஜ் சோப்ரா | திருமணத்தில் நீரஜ் சோப்ரா வாங்கிய வரதட்சணை என்ன? – தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!

இங்கிலாந்து அணி – ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கெட், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜெமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஜெமி ஓவர்டன், ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ்மூத், அட்கின்சன், அட்கின்சன் , மார்க் வூட்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *