சுற்றுச்சூழல்

இந்திய அளவில் காற்றின் தரத்தில் நெல்லை முதலிடம்! | இந்தியாவிலேயே காற்றின் தரத்தில் திருநெல்வேலி முதலிடம்!


தரமான காற்று கிடைக்கும் நகரங்களில் இந்திய அளவில் திருநெல்வேலி முதலிடம் பிடித்துள்ளது. இந்திய நகரங்களில் காற்று தரக் குறியீடு ஆய்வில் மாசுபடாத காற்றைக் கொண்ட நகரங்களில் திருநெல்வேலிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதற்கான மத்திய விவரங்களை வெளியிட்டுள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் தரக் குறியீட்டு (AQI) தரவை கடந்த 9-ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை செயல்பாடு, வாகனங்களின் பெருக்கம் மற்றும் மனிதர்கள் காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.

நாட்டிலுள்ள நகரங்களில் காற்றின் தரம், அதில் கலந்துள்ள மாசுக்கள் குறித்த ஆய்வை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து, அது தொடர்பான தரவுகளை வெளியிடுகிறது. நாட்டில் பல்வேறு நகரங்களில் காற்றின் தரம் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் சவாலாக உள்ளது அந்த புள்ளி விவரங்கள் காட்டப்படுகின்றன. அந்தவகையில் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களில் சுத்தமான காற்று மற்றும் சிறந்த காற்றுத் தரக் குறியீடு உள்ள இந்தியாவின் முதல் 10 நகரங்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பட்டியலிட்டு, அந்த நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் தரக் குறியீட்டு அளவையும் கடந்த 9-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

அந்த அளவுகளின்படி நாட்டிலுள்ள நகரங்களில் மிகச்சிறந்த காற்றின் தரம் இருக்கும் நகரமாக திருநெல்வேலி திகழ்கிறது. தமிழகத்தின் திருநெல்வேலி முதல் இடத்தையும், அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் 2-வது இடத்தையும், கர்நாடகாவின் மடிக்கேரி 3-வது இடத்தையும், விஜயபுரா 4-வது இடத்தையும், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் 5-வது இடத்தையும் பிடித்துள்ளன.

டெல்லியில் மிகவும் மோசம்: காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும் நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தை இந்திய தலைநகரான புதுடெல்லி பிடித்துள்ளது. மோசமான காற்று தரம் உள்ள 2-வது இடமாக உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தும், 3-வது இடத்தை மேகாலயாவின் பிரின்ஹேட் நகரமும் பிடித்துள்ளன. சண்டிகர், உத்தரபிரதேசம், ஜார்க்கன்ட், ஹிமாச்சலபிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை காற்றின் தரம் மோசமாக உள்ள முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

நாட்டிலேயே காற்றின் தரம் சிறப்பாக உள்ள நகரமாக திருநெல்வேலி திகழ்வது குறித்த தகவல் இங்குள்ள மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் ஒரு நாள் எடுத்த அளவீட்டைக் கொண்டு காற்றின் தரம் சிறப்பாக உள்ளதாகக் கருத முடியாது என்று திருநெல்வேலியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் தெரிவித்தார். அவர் கூறினார்:

“மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 9-ஆம் தேதி ஒரு நாளில் எடுத்த தகவல்களை மட்டுமே வெளியிட்டுள்ளதாகவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேற்று நேற்றிரவு 15-ஆம் தேதி எடுத்த அளவீடுகளின்படி, திருநெல்வேலியில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் மாசு 3.1 மடங்கு அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, ஒரு நாளில் மட்டும் எடுத்த அளவீடுகளை திருநெல்வேலியில் காற்று மாசு குறைந்துள்ளது. ஒரு வருடத்தின் குறிப்பிட்ட இடைவெளிகளில் பல்வேறு காலசூழல்களில் இத்தகைய அளவீடுகளை சரிவர மேற்கொண்டு, அந்தத் தரவுகளை ஒப்பாய்வு செய்து வெளியிட வேண்டும்” என தெரிவித்தார்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *