சினிமா செய்திகள்

Ajith Interview: “அஜித் வாழ்க! விஜய் வாழ்க நீங்க எப்போ வாழப்போறிங்க?” – துபாயில் அஜித் பேட்டி! | அஜித் மனநலம் மற்றும் சமூக ஊடக நச்சுத்தன்மை பற்றி திறக்கிறார்


மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது!

மேலும் பேசிய அஜித், “இன்றைய தேதியில் சமூக வலைதளப் பக்கங்களில் நச்சுத்தன்மை நிரம்பியுள்ளது. இன்று உலகமெங்கும் உள்ள மக்களுக்கு மென்டல் ஹெல்த் ஒரு முக்கியமான பிரச்னையாகவும் இருக்கிறது. அவர்களுடைய மென்டல் ஹெல்த்தை அவர்கள் இழக்கிறார்கள். சிக்ஸ் பேக்ஸ் போன்ற உடல் ஆரோக்கியத்தை தாண்டி மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. பலர் அதை இழக்கிறார்கள். வாழ்க்கை மிகவும் சிறியது என்று என்னுடைய ரசிகர்களுக்கு நான் கூறுவேன். `எண்ணம் போல் வாழ்க்கை’ என்ற கூற்று இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவே உங்களுடைய வாழ்க்கை என்பதுதான் இதற்கு அர்த்தம்.

துபாய் 24H தொடரில் அஜித்

துபாய் 24H தொடரில் அஜித்

உங்கள் நல்ல எண்ணங்கள் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும். உங்களுடைய லட்சியங்களை அடைய உங்களின் திறனை அதற்கேற்ப வளர்த்துக் கொள்ளுங்கள். என்னுடைய ரசிகர்களே….படத்தை பாருங்கள். `அஜித் வாழ்க, விஜய் வாழ்க’ எனக் கூறுகிறீர்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள். நான் உங்களுடைய அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் வாழ்க்கையை கவனியுங்கள். என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைவேன்.” எனப் பேசினார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *