விவசாயம்

250 வகையான காய்கறி ரகங்கள்.! இயற்கை விவசாயத்தில் அசத்தும் வாலிபர்..!!


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

250க்கும் மேற்பட்ட காய்கறி ரகங்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து விற்பனை செய்து வருகிறார் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவர்.

எக்ஸ்

இயற்கை

இயற்கை விவசாயம் செய்து அசத்தும் சேலம் வாலிபர்

இந்த மக்கள் பெரும்பாலும் இரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யப்படுகிறது. இதனால் மண் மலடு ஆவது மட்டுமல்லாமல், மனிதர்கள் இந்த இரசாயன உரத்தினால் ஆன காய்கறிகளையும், பழங்களையும் உட்கொள்ளும் போது உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், இரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை முறையில் விவசாயம் செய்து 250 வகையான காய்கறிகளை விளைவித்து சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் வருகிறார். இவர் கடந்த ஐந்து வருட காலமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

இவரின் ஐந்து ஏக்கர் விளைநிலத்தில் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், தக்காளி, பீன்ஸ், புடலங்காய், பூசணி, சுரக்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி போன்ற காய் வகைகளிலும் 250க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. ஆடு, மாடு சாணம், மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறார். இவர் எந்தவிதமான ரசாயன உரங்களையும் பயன்படுத்துவதில்லை. இவருடன் இணைந்து இவருடைய மனைவியும் விவசாயத்தில் தீவிரம் காட்டி வருகிறார். இருவரும் இணைந்து இந்த இயற்கை விவசாயத்தினை கடைப்பிடித்து வருகின்றனர்.

இயற்கை விவசாயம் குறித்து பிரவீன் கூறினார்; “சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். எங்களிடம் வீட்டிற்கு தேவையான அனைத்து காய்கறிகளும் விற்பனை செய்து வருகிறோம். எந்த ஒரு ரசாயன உரங்களையும் பயன்படுத்தாமல் மாட்டு சாணம், எருவு போன்ற இயற்கை உரங்களையே பயன்படுத்தி வருகிறோம். எங்களிடம் 250க்கும் மேற்பட்ட காய்கறிகள் உள்ளன. இதில் தக்காளியில் நூறு ரகமும், வெண்டையில் பத்தும் ரகமும், சுரைக்காயில் 15 ரகமும், புடலங்காயில் பத்து ரகமும் குறிப்பிட்டு சொல்லலாம்.

உங்கள் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனைகள்,மருத்துவர்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

இது மட்டுமில்லாமல் உடலுக்கு நற்பயன்களை விளைவிக்கும் கீரை வகைகளில் 35 வகையான கீரை வகைகள் நம்மிடம் உள்ளது. இதில் பல்வேறு வகையான காய்கறி வகைகளை எங்களது தோட்டத்தில் உற்பத்தி செய்து வருகிறோம்.நாங்கள் இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பதற்கான காரணம் என்னவென்றால், மரபு காய்கறிகள் அழிந்து கொண்டே வருகிறது. அதற்கான முதல் படி தான் இது. சிறுவயது குழந்தைகள் முதலே சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு உள்ளாகிறார்கள். இதனைத் தவிர்க்கவே முடிந்தவரை இயற்கை முறையில் விளைவிக்க பட்ட காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். முடிந்தால் மாடி தோட்டம் அமைத்து வீட்டிற்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொண்டால் இன்னும் நல்லது” என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *