கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
விழுப்புரம் வெள்ளம்| ஃபெஞ்சால் புயல் காரணமாக மொத்த கரும்பு வீணாகி விட்டதாகவும் கரும்பு ஒன்றுக்கு 38 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஃபெஞ்சல்” புயல், கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, விழுப்புரம் அருகே உள்ள பிடாகம், குச்சிபாளையம் பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 60 ஏக்கருக்கும் அதிகமான பன்னீர் கரும்புகள் சாய்ந்ததால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பொங்கல் தொகுப்புக்கு கரும்பு கொள்முதல் செய்யும்போது, கரும்பு ஒன்றுக்கு 5 ரூபாய் கூடுதலாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் தொகுப்பில், பன்னீர் கரும்பும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் அருகே உள்ள பிடாகம், குச்சிப்பாளையம், மரகதபுரம், அத்தியூர், வேலியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்புகளை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரத்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு, ஃபெஞ்சல் புயல் காரணமாக மழை பெய்துள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நெற்பயிர்கள், கரும்பு என அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி, சாய்ந்து சேதமடைந்துள்ளன.
இதையும் வாசிக்க: மாதம் ₹1.45 லட்சம்… இந்திய தபால் துறையில் வேலை… வெளியான சூப்பர் அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள பிடாகம் குச்சிபாளையம் பகுதிகளில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக அரசு கொள்முதல் செய்வதற்காக பன்னீர் கரும்புகளை பயிரிடுகின்றனர் விவசாயிகள். இந்நிலையில் கனமழை காரணமாக 60 ஏக்கருக்கு மேல் கரும்புகள் நிலத்தில் சாய்ந்துள்ளதால் கரும்புகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஒரு ஏக்கருக்கு உரம், கூலி என குறைந்தபட்ச பராமரிப்பு மூன்று லட்சம் வரை செலவாகும் நிலையில், சாய்ந்த கரும்புகளை சரி செய்ய கூடுதலாக 50,000 ரூபாய் வரை செலவு செய்து உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சென்ற வருடம் கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் அறிவித்திருந்தது. போக்குவரத்து எல்லாம் போக தங்களுக்கு 21 ரூபாய் கிடைத்ததாக விவசாயிகள். எனவே தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்கு, தமிழக அரசு தங்களின் நிலையை கருத்தில் கொண்டு கரும்பு ஒன்றுக்கு ஐந்து ரூபாய் அதிகரித்து 38 ரூபாய்க்கு கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
டிசம்பர் 27, 2024 2:01 PM IST