05
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாரத்தின் துவக்கத்தில் உங்களுடைய புகழ், மரியாதையும் அதிகரிக்கும். அதிகாரிகள் உங்களுடைய வேலையை பாராட்டுவார்கள். தந்தையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை தேடி இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் பங்கு கொள்வீர்கள். பருவகால அல்லது நாள்பட்ட நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 9