மாத ராசி பலன்

மீனம் ராசிக்கான செம்பர் மாத பலன்கள் – News18 தமிழ்


கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் – சப்தம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி (வ) – அயனசயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

இம்மாதம் 06ம் தேதி சுக்கிர பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இம்மாதம் 07ம் தேதி செவ்வாய் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

விளம்பரம்

இம்மாதம் 13ம் தேதி புத பகவான் சப்தம ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பம்.

இம்மாதம் 14ம் தேதி குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இம்மாதம் 17ம் தேதி சூர்ய பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இம்மாதம் 27ம் தேதி சனி பகவான் லாப ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்:

சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் மீன ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து கொள்ளலாம். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.

விளம்பரம்

தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும்.

வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

விளம்பரம்

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு கவனமாக பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும்**.**

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.

விளம்பரம்

பூரட்டாதி:

இந்த மாதம் மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களையே தரும்.

விளம்பரம்

ரேவதி:

இந்த மாதம் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். சூரியன் சஞ்சாரம் மூலம் திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும்.

பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 10, 11

அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5

மேலும் படிக்க..

செப்டம்பர் மாதப் பலன்கள்:

மேஷம்
,
ரிஷபம்
,
மிதுனம்
,
கடகம்
,
சிம்மம்
,
கன்னி
,
துலாம்
,
விருச்சிகம்
,
தனுசு
,
மகரம்
,
கும்பம்
,
மீனம்

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *