நடிகை ரேக்கா அவர்களின் காமெடி கலாட்டாக்கள்
நடிகை ரேக்கா அவர்கள் 80 முதல் 90 வயது வரை மக்கள் மனதில் கனவாக இருந்தவர். டீச்சர் என்றாலே நம் அனைவருக்கும் மனதில் வருபவர் கடலோரக் கவிதை படம் தான் இன்று வரை டீச்சர் என்றால் ஒரு கண்ணாடி, குடை, ஹேன்பேக் என்று ஒரு தோற்றத்தை உருவாக்கியவர் நம்ம ரேக்கா அவர்கள். அவர் நடித்த எல்லா படங்களிலும் அவர் குடும்ப பாங்கான படங்களில் நடித்தவர். அப்டித்தான் நமக்கு ரேக்கா அவர்களை பத்தி தெரியும்
.ஆனால் ரேக்கா அவர்கள் காமெடி பண்ணுவாங்க அப்டிங்கறத விஜய் டிவில வர குக் வித் கோமாளி ஷோ மூலம் தெரிஞ்சுக்க முடியுது. அவிங்க மணிமேகலையுடன் சமைக்கும் போது அவிங்க பண்ற விஷயங்கள் ரெம்ப காமெடியா இருக்குது. ரேக்கா அவர்கள் மணிமேகலை கேட்கற ஒவ்வொரு கேள்விக்கும் அவிங்க கொடுக்கற கவுன்ட்டர் நம்மள சிரிக்க வைக்கறாங்க, ரேக்கா அவர்களுக்கு இப்படி காமெடி பண்ணுவாங்க அப்டின்னு நெட்டிசன்கள் ஆச்சர்ய படறதா சோசியல் மீடியா பேஜ் பக்கம் ஷேர் பண்ணிருக்காங்க. அது மட்டும் இல்லாமல் ரேக்கா அவர்கள் சமையல் செய்வதிலும் கில்லாடியா இருக்காங்க அவிங்க சமைக்கற சாப்பாடு எல்லாத்தையும் நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமு அவர்கள் புகழ்ந்து பேசி இருக்காங்க. நம்ம ரேக்கா அவர்கள் நடிப்பு மட்டும் இல்லை காமெடியிலும் கிங்ன்னு நிருபிச்சுட்டு வராங்க.