வணிகம்

HDFC கிரெடிட் கார்டு அக்கவுன்ட்டை மூடுற ஐடியா இருக்கா…? இந்தப் பதிவு உங்களுக்குத்தான்…!



கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

HDFC கடன் அட்டை | உங்களுடைய HDFC கிரெடிட் கார்டை நீங்கள் மூட நினைத்தால் பின்வரும் எளிமையான படிகளை நீங்கள் பின்பற்றலாம்.

செய்தி18

நமது வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார இலக்குகளுக்கு பொருந்தும் வகையிலான பல்வேறு கிரெடிட் கார்டுகளை HDFC வங்கி வழங்குகிறது. இந்த கார்டுகள் கேஷ்பேக், ரிவார்டுகள், பிரத்தியேகமான டீல்கள் மற்றும் புரோகிராம்களை வழங்குவதன் மூலம் உங்களுடைய சேமிப்புகளை அதிகரிப்பதற்கு உதவுகிறது. எனினும், உங்களுடைய HDFC கிரெடிட் கார்டை நீங்கள் மூட நினைத்தால் பின்வரும் எளிமையான படிகளை நீங்கள் பின்பற்றலாம்.

ஆன்லைன் முறை

  • முதலில் HDFC வங்கி அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் லாகின் செய்யவும்.
  • ஃபார்ம்ஸ் சென்டர் பிரிவில் உள்ள கிரெடிட் ‘கார்டு கிளோசர் படிவத்தை’ டவுன்லோடு செய்யவும்.
  • உங்களுடைய பெயர், கிரெடிட் கார்டு நம்பர் மற்றும் தொடர்பு விவரம் ஆகியவற்றைப் படிவத்தில் நிரப்பவும்.
  • HDFC வங்கியின் கஸ்டமர்கர் இமெயில் ஐடிக்கு பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்கவும்.

எழுத்துப்பூர்வமான கோரிக்கை

  • உங்களுடைய பெயர், கார்டு நம்பர் மற்றும் கேன்சல் செய்வதற்கான காரணம் குறிப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதவும்.
  • இந்த கடிதத்துடன் உங்களுடைய கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் ஐடி கார்டின் ஒரு நகரை இணைக்கவும்.
  • பின்வரும் முகவரிக்கு இந்த டாக்குமென்ட்களையும், கடிதத்தையும் நீங்கள் அனுப்பி வைக்கலாம். தபால் எண்: 8,654, திருவான்மியூர், சென்னை- 600041

வங்கி கிளையை நேரடியாக அணுகுதல்

  • உங்கள் வீட்டின் அருகில் உள்ள HDFC வங்கிக் கிளைக்கு செல்லுங்கள்.
  • இங்கு நீங்கள் கிரெடிட் கார்டு கிளோசர் படிவத்தை பூர்த்தி செய்து, அதனுடன் செல்லுபடி ஆகக்கூடிய ஒரு அடையாள சான்றிதழை வழங்க வேண்டும்.
  • வங்கி ஊழியர்கள் உங்களுடைய டாக்குமென்ட்களை சரிபார்த்து கோரிக்கையை பிராசஸ் செய்வார்கள்.

வாடிக்கையாளர் சேவை மையம்

  • HDFC வங்கி கிரெடிட் கார்டு கஸ்டமர் கேர் ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்யுங்கள்.
  • உங்களுடைய கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் தனிநபர் சரிபார்ப்பு விபரங்களை வழங்கவும்.
  • உங்களுடைய கிரெடிட் கார்டை கேன்சல் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை கூறுங்கள்.
  • அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை வாடிக்கையாளர் சேவை அதிகாரி உங்களுக்குக் கூறுவார்.

இதையும் படிக்க: PPF: பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து மாதம் ரூ.1,06,828 வரி இல்லாத வருமானத்தைப் பெறுவது எப்படி?

வெர்சுவல் பாட் EVA

  • நீங்கள் HDFC வங்கியின் வெர்ச்சுவல் அசிஸ்டண்ட் பயன்படுத்தி ‘கிரெடிட் கார்டு மூடல்’ என்ன டைப் செய்ய வேண்டும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை கொடுக்கவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள OTP-ஐ என்டர் செய்யுங்கள்.
  • பின்னர் கிரெடிட் கார்டின் கடைசி நான்கு இலக்கங்களை இணைக்கவும்.
  • எதற்காக கிரெடிட் கார்டை மூட நினைக்கிறீர்கள் என்ற காரணத்தை தேர்வு செய்யவும்.
  • இதன் பிறகு உங்களுடைய கிரெடிட் கார்டை மூடுவதற்கான கோரிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பீர்கள்.

HDFC கிரெடிட் கார்டை மூடுவதற்கு முன்பு நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • நிலுவையில் உள்ள மாத தவணைகள், வட்டி மற்றும் கட்டணங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். அக்கவுண்ட் பேலன்ஸ் பூஜ்ஜியத்தை விட அதிகமாக இருந்தால் உங்களுடைய கோரிக்கை நிறைவு செய்யப்படாது.
  • கார்டை நீங்கள் கேன்சல் செய்துவிட்டால் ரிவார்டு பாயிண்டுகள் காலாவதி ஆகிவிடும். எனவே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: டிஜிட்டல் மோசடிகள்… அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை இவைதான்…!

  • ஆட்டோமேட்டிக் பில் பேமென்ட்கள் அல்லது சப்ஸ்கிரிப்ஷன் போன்றவற்றை கிரெடிட் கார்டுடன் இணைத்து இருந்தால் அவற்றை அகற்றி விடவும்.
  • ஒருவேளை நீங்கள் வேறு ஒரு கார்டு வாங்க தயாராக இருந்தால் இந்த மூடுதல் செயல்முறை ஆரம்பிப்பதற்கு முன்பு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கவும்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *