ஆன்மிகம்

தொன்மையான கட்டடக் கலை கோயிலில் முருகப்பாஸ் சோழ மண்டலம் – என்ன பணிகள் செய்யப் போகிறார்கள்?|Murugappa’s Chola Mandalam offersability to Kancheepuram Kailasanathar temple


இது குறித்து சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ரவீந்திர குமார் கூறினார், “வரலாற்று சிறப்பு தொன்மையான நினைவுச் சின்னமாக திகழும் கைலாசநாதர் திருக்கோயிலை பராமரிக்கவும், சுற்றுலாவுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் சோழமண்டலம் நிறுவனம் பங்களிப்பு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் பணியினை நாங்கள் செய்கிறோம். அதன்படி இத்திருக்கோயிலின் அருகில் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை மற்றும் பராமரிப்பு வசதி உள்ளிட்ட சுற்றுலாவுக்கு அத்தியாவசிய தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை சோழமண்டலம் நிறுவனம் ஏற்படுத்தித் தரும். மேலும் இத்திருக்கோயிலின் அருகிலேயே கோயில் குறித்து சரியான தகவல்களை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதற்காக ஒரு மொழிபெயர்ப்பு மையம் மற்றும் சிற்பங்களுக்கான ஒரு அருங்காட்சியகம் ஆகியவை அமைக்கப்படும். மேலும் இரவு நேரத்தில் அழகாக காட்சிப்படுத்தப்படும் ஒளிவிளக்கு வசதியும் ஏற்படுத்தி தரப்படும்.

தொன்மையான கட்டடக் கலை கோயிலில்...

தொன்மையான கட்டடக் கலை கோயிலில்…

காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய சின்னங்களின் உத்தேச பட்டியலில் 2021 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இது இத்திருக்கோயிலின் கலாச்சாரம், கட்டிடக்கலை மற்றும் வரலாற்று ரீதியான முக்கியத்துவத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். எதிர்காலத்தில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் நிரந்தரமாக இந்த கோயில் இடம் பெறுவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *