கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச சர்வ தரிசன டோக்கன் விநியோகம் வியாழன்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச சர்வ தரிசன டோக்கன் விநியோகம் வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 300 சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக கடந்த 9ம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுன்ட்டர்களில் இலவச தரிசன டோக்கன் விநியோகம், விஜபி தரிசனம் நிறுத்தப்பட்டது. மேலும், திருப்பதி மற்றும் திருமலையில் 8 மையங்களில் 94 கவுன்ட்டர்கள் மூலம் நேரடியாக இலவச டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் உட்பட 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.
அதன் பிறகு பரிகார பூஜைகள் தொடர்ந்து 10 நாட்களுக்கு வைகுண்ட துவாரம் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், வியாழன்கிழமை 23ஆம் தேதி அதிகாலை முதல் மீண்டும் இலவச தரிசன டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஜெகதளா ஹெத்தையம்மன் திருவிழா… நடனமாடி மகிழ்ந்த 6 கிராம மக்கள்..
திருப்பதி பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசம், ரயில் நிலையம் அருகில் உள்ள விஷ்ணு நிவாஸம், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட கட்டிட வளாகங்களில் இந்த இலவச டோக்கன் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி, சித்தூர், ஆந்திரப் பிரதேசம்
ஜனவரி 22, 2025 2:58 PM IST