ஆன்மிகம்

திருச்செந்தூர்: 2 மாதத்திற்குப் பிறகு ஆசி வழங்கிய தெய்வானை யானை… மகிழ்ச்சியில் பக்தர்கள்!


முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு, கடற்கரை ஓரத் தலமுமானது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், விடுமுறை மற்றும் சிறப்பு நாட்களில் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இக்கோயிலில் 26 வயதான தெய்வானை என்ற பெண் யானை அன்னதான மண்டபம் அருகிலுள்ள யானைக்கூடத்தில் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருக்கோயில் நிர்வாக நிதி மட்டுமின்றி, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள யானை பராமரிப்பு உண்டியல்கள் மூலம் கிடைக்கப் பெறும் பக்தர்களின் காணிக்கைகள் மூலமும் தெய்வானை யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

தெய்வானை யானை
தெய்வானை யானை

தினமும் காலை, மாலை வேளைகளில் தெய்வானை யானை கோயிலில் வெளிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். அதேபோல முக்கிய விசேஷ நாள்களிலும், விரத நாள்களிலும் ரத வீதிகளில் சுற்றி வருவது வழக்கம். திருக்கோயில் அருகிலுள்ள சரவணப் பொய்கையில் ஷவர் வசதியுடன் கூடிய பிரம்மாண்ட நீச்சல் குளம் தெய்வானை யானைக்காக கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்டது. இந்த நீச்சல் குளத்தில்தான் தினமும் தெய்வானை உற்சாகக் குளியல் போட்டு அலங்கரிக்கப்பட்டு, கோயிலுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி மதியம் சுமார் 3 மணி அளவில் உதவி பாகர் உதயகுமார், யானை தெய்வானைக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது உறவினரான நாகர்கோவிலைச் சேர்ந்த சிசுபாலன் என்பவர், யானையைப் புகைப்படம் எடுத்ததுடன் செல்ஃபியும் எடுத்துள்ளார். அப்போது தெய்வானை யானை சிசுபாலனைத் தாக்கியுள்ளது. இதைத் தடுக்க முயன்ற உதயகுமாரையும் தாக்கியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து வனத்துறை அலுவலர்கள், கால்நடைத்துறை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் யானை வைக்கப்பட்டிருந்தது.

தெய்வானை யானை
தெய்வானை யானை

பக்தர்கள் யாரும் யானைக்கூடத்தின் அருகில் அனுமதிக்கப்படவில்லை. சில நாட்களுக்குப் பிறகு யானைக்கூடத்தை விட்டு தெய்வானை யானை வெளியே வரப்பட்டு மரத்தடியில் கட்டிப்போடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு பிறகு திருக்கோயில் வளாகத்தை வழக்கம் போல் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கியது தெய்வானை யானை. 2 மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி பக்தர்களுக்கு ஆசை வழங்கியதால் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே கிளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், கிரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *