இது குறித்து அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் விசாரித்த போது, ”ஏலகிரி மலையில் சுற்றிப் பார்ப்பதற்கு எண்ணற்ற இடங்கள் உள்ளன. ஆனால் ஓடி , ஆடி விளையாடிய பிறகு ஆத்திர அவசரத்துக்குப் போவதற்கு ஒரு பொது கழிவறை இல்லையே… ஆண்கள் நாங்கள் எதோ கொஞ்சம் சமாளித்துக் கொள்வோம். வீட்டுப் பெண்கள் என்ன செய்வார்கள்… சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கு சரியாக கட்டணத்தைச் வசூலிக்கும் அரசாங்கம், இதையும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்” என்றனர்.
மேலும், பெண் ஒருவர், “இவ்வளவு மக்கள் வந்து செல்லும் இடத்திற்கு அடிப்படையாக ஒரு கழிவறை கூட இல்லையென்றால் எப்படி. பெண்கள் நாங்களெல்லாம் எங்கே செல்வது?” என ஆதங்கப்பட்டார்.
இதைப் பற்றி அங்குள்ள கடைக்காரர்கள் மற்றும் மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர்கள், “எங்களிடம் வந்து தான் கழிவறையை உபயோகப்படுத்திக் கொள்வார்கள். சிலர் என்றால் பரவாயில்லை பெருமளவில் வந்து இதேபோல் கேட்கிறார்கள்.