கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மிகவும் திறமையானவர்கள் தேவை என்பதால் H-1B விசாவை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் H1B விசா வழங்கப்படுகிறது. இதனால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டது, அதனால் H1B விசாவை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்தது.
அமெரிக்க அதிபராக 2 ஆவது முறையாக பதவியேற்றுள்ள டிரம்ப், இந்த பிரச்னையில் என்ன முடிவெடுக்க போகிறார் என்ற கலக்கத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் வந்தனர்.
விசாவில் வரும் தம்பதிக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் வழங்கப்படும் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது கூடுதல் கவலையை ஏற்படுத்தியது. ஆனால், அவர்கள் நிம்மதி மூச்சுவிடும் வகையில், அமெரிக்காவுக்கு மிகவும் திறமையான பணியாளர்கள் வருவதை தாம் விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஆரக்கிள், சாப்ட்பேங்க், ஓபன்ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இதை அவர் தெரிவித்தார். டெஸ்லா சி.ஐ.ஓ. எலான் மாஸ்க் உள்ளிட்டோர் H-1B விசா திட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஜனவரி 22, 2025 6:36 PM IST