கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கட்டுப்பாடுகளை விதித்தது.
பிரபல இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடுகிறார்.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களை இழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் உள்ளூர் போட்டிகளை விளையாடாமல் சர்வதேச போட்டிகளில் சோதப்புவதாக இந்திய வீரர்கள் மீது சரமாரி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாட இருப்பதாக ரோகித் சர்மா அறிவித்தார்.
இதேபோல் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ள விராட் கோலி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கம்பேக் கொடுத்துள்ளார். வரும் 30 ஆம் தேதி நடைபெற இருக்கும் ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி சார்பாக விராட் கோலி களமிறங்க உள்ளார்.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு
ஜனவரி 21, 2025 2:28 PM IST