வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே சதி செய்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியாா் நினைவு கலையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வளா் தமிழ் நூலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதற்காக திருச்சியில் இருந்து சாலை வழியாக காரைக்குடிக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வர், அழகப்பா பல்கலைக்கழகத்தில் பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்க வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டப்பட்ட லட்சுமி வளா் தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார்.
பின்னா், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகக் கட்டடத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவா உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.