நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் குல தெய்வமாக ஹெத்தையம்மனை வழிபட்டு வருகின்றனர். மூதாதையரான ஹெத்தையம்மனை வாழ்வின் அங்கமாகவே போற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறும் ‘ஹெத்தே ஹப்பா’ எனப்படும் ஹெத்தையம்மன் திருவிழாவில் ஒட்டுமொத்த படுகர் மக்களும் ஒன்று கூடிக் கொண்டாடி வருகின்றனர்.
ஊட்டி அருகில் உள்ள ஜெகதளா கிராமத்தில் தற்போது ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. ஹெத்தைக்காரர்கள் எனப்படும் கோயில் பூசாரிகள் 48 நாட்கள் விரதமிருந்து குண்டம் இறங்கி அருள்வாக்கு வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து ஜெகதளா மடியறை எனப்படும் பாறை ஹெத்தையம்மன் கோயிலில் இருந்து கன்னி ஹெத்தை கோயிலுக்கு அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பட்டுடுத்தி தரிசனம் அளித்த ஹெத்தையம்மனைப் பல்லாயிரம்க்கணக்கான பக்தர்கள் வெள்ளை நிற ஆடையில் இசை, நடனம் என வழிநெடுகிலும் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
ஹெத்தையம்மனுக்கு இணையாகச் சிறுமிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளையில் அம்மனுக்கு உகந்த புனித குடைகளைப் பிடித்தும் பூசாரிகள் செங்கோல் ஏந்தியும் வந்தது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே கிளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், கிரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.