வணிகம்

திருமணத்துக்கு கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி..? என்னென்ன ஆவணங்கள் தேவை?



கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

ஒவ்வொரு வருடமும் திருமணத்திற்கான செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

செய்தி18

உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் இந்திய திருமணங்கள் தனித்துவமான கொண்டாட்டங்களைக் கொண்டுள்ளன. வீட்டிற்கு முன்பு பந்தக்கால் நடப்பதில் இருந்து ஆரம்பித்து கலர் கலராக சீரியல் பல்புகள், ஸ்பீக்கரில் ஒலிக்கும் பாடல்கள், வண்ணமயமான பூக்களால் ஆன அலங்காரங்கள், ஜொலிக்கும் தங்க நகைகள், மினுமினுக்கும் பட்டு என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதற்கு ஆகக்கூடிய செலவைக் கேட்டால் நமக்கு மயக்கமே வந்துவிடும்.

2024 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதம் இடைப்பட்ட சமயத்தில் கிட்டத்தட்ட 4.8 மில்லியன் திருமணங்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் 6 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக சர்வே ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு திருமணத்திற்கு 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. இன்னும் ஒரு சிலர் கோடிக்கணக்கில் கூட திருமணத்திற்கு பணம் செலவழிக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் திருமணத்திற்கான செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு திருமணத்திற்கான பர்சனல் லோன்களை வழங்குகின்றன. இது பலருக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கிறது. பல பிளாட்ஃபார்ம்களில் 100% டிஜிட்டல் முறையில் உடனடியாக பர்சனல் லோன்கள் கிடைக்கின்றன. இது குறித்த விளக்கமான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

திருமணக் கடன் என்றால் என்ன?:

ஒரு திருமணத்திற்கு ஆகக்கூடிய செலவுகள் அனைத்தையும் ஈடுகட்டுவதற்கு மேரேஜ் லோன் என்ற ஒரு வகையான பர்சனல் லோன் வழங்கப்படுகிறது. திருமண மண்டபம், சாப்பாடு, மணமக்களுக்கான ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், அலங்காரங்கள் போன்ற பல்வேறு செலவுகள் இதில் அடங்கும்.

  • இந்தியாவில் திருமண கடன் வாங்குவதற்கு தேவையான தகுதி வரம்புகள்:
  • 21 முதல் 60 வயது வரையிலான இந்திய குடிமக்களுக்கு திருமண கடன் வழங்கப்படுகிறது.
  • வருமானத்திற்கான நிலையான ஒரு மூலம், அந்த மாத சம்பளமாக இருந்தாலும் சரி அல்லது சுய வேலை வாய்ப்பாக இருந்தாலும் சரி.
  • 750 மற்றும் அதற்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது அவசியம். அதிக கிரிடிட் ஸ்கோர் இருந்தால் வட்டி குறைவாக இருக்கும்

வட்டி விகிதங்கள் எவ்வளவு?:

இந்தியாவில் வழங்கப்படும் திருமண கடன்களுக்கு ஒரு ஆண்டுக்கு 10% முதல் 20% வரையிலான வட்டிவசூலிக்கப்படுகிறது. இது விண்ணப்பதாரரின் கிரெடிட் வரலாறு மற்றும் தற்போதைய சந்தை நிலவரங்களின் அடிப்படையில் அமையும்.

விண்ணப்பிப்பது எப்படி?:

  • திருமண கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு முதலில் நீங்கள் பல்வேறு வங்கிகளுக்கு திருமண கடன்கள் வழங்கும் வட்டி விகிதங்கள், லோன் கால அளவு மற்றும் பிராசசிங் கட்டணங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்து உங்களது தோதாக அமையும் ஒரு கடன் வழங்குனரை தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்தபடியாக ஆதார் அட்டை, முகவரி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் சமீபத்திய புகைப்படம் போன்றவற்றை தயார் நிலையில் வையுங்கள்.
  • கடன் வழங்குனரின் வெப்சைட் அல்லது மொபைல் அப்ளிகேஷனில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • தேவையான டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து அப்லோடு செய்யவும்.

திருமண கடன் என்பது உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணத்திற்கான செலவுகளை சமாளிப்பதற்கான ஒரு சிறந்த வழியாக அமைகிறது. ஆனால் அதே சமயத்தில் உங்களுடைய பொருளாதார சூழ்நிலை மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கான திறனை மதிப்பிட்டு திருமண கடனுக்கு விண்ணப்பிப்பது அவசியம். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் நிகழ்வு தான், ஆனாலும் இந்த அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி பிரச்சனைகளை மாட்டிக் கொள்வது புத்திசாலித்தனமான யோசனையாக இருக்காது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *