கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
அழகப்பா பல்கலைக்கழக அலுவலகக் கட்டடத்தில், திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து, முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
2 நாள் பயணமாக சிவகங்கை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, ராஜீவ் காந்தி சிலை அருகே பாரம்பரிய மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் முதலமைச்சரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்திற்குள் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர், அழகப்பா பல்கலைக்கழக அலுவலகக் கட்டடத்தில், திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து, முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், நா தழுதழுக்க தனது தாயாரை நினைவு கூர்ந்து, கண்ணீர் சிந்தினார். ப.சிதம்பரம் பேசுகையில், “எனது தாயார் ஆங்கிலம் மற்றும் தமிழ் நன்கு தெரிந்தவர். என்னை இளம் வயதிலேயே தமிழ் மற்றும் ஆங்கில நூல்களைப் படிக்கத் தூண்டியவர் அவர்தான். அவருக்கு என் நன்றி கலந்த அஞ்சலி” என்று கூறி உடைந்து அழுதார்.
தொடர்ந்து பேசிய ப.சிதம்பரம், “அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் வளர் தமிழ் நூலகத்தை நிறுவும் வாய்ப்பு எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமை. தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழ் மக்கள் தமிழைப் பேசவும், எழுதவும் வேண்டும். டிஜிட்டல் முறையில் தமிழ் வர வேண்டும்.
தனது தாயார் லட்சுமி பற்றி பேசியபோது தழுதழுத்த குரலில் உரையாற்றிய ப.சிதம்பரம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்
லட்சுமி அம்மையார் பெயரில் நூலகம் திறப்பு விழா#சொய்தம்பரம் #காரைக்குடி #அழகப்பா பல்கலைக்கழகம்#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/lhrm8lTj5C— நியூஸ்18 தமிழ்நாடு (@News18TamilNadu) ஜனவரி 21, 2025
விழாவில் பங்கேற்றுப் பேசிய கவிஞர் வைரமுத்து, “மேகம் அழுவது உண்டு அதற்குப் பெயர் மழை. இரவு கூட அழுவது உண்டு அதற்குப் பெயர் பனி. சூரியன் அழுது பார்த்ததுண்டா.. சிதம்பரம் கண் கலங்கியபோது நான் இன்று அதைப் பார்த்தேன். ப.சிதம்பரம் பெருமையை வெளியிடுவதை விரும்பாதவர், இலக்கிய ரசிகர்” என்றார்.
ஜனவரி 21, 2025 2:20 PM IST