ஆன்மிகம்

ஜெகதளா ஹெத்தையம்மன் திருவிழா… நடனமாடி மகிழ்ந்த 6 கிராம மக்கள்…


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

ஹெத்தை அம்மன் திருவிழா: ஜெகதளா ஹெத்தையம்மன் திருவிழாவில் 6 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடனமாடி மகிழ்ந்தனர்.

எக்ஸ்

ஹெத்தாய்

Hethai Amman Festival: ஜெகதளா ஹெத்தையம்மன் திருவிழா… நடனமாடி மகிழ்ந்த 6 கிராம மக்கள்…

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் சுமார் 400 கிராமங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்களது குலதெய்வமாக ஹெத்தையம்மனை வழிபாடு செய்கின்றனர். சுமார் 48 நாட்கள் விரதம் இருந்து ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று சிறப்பிக்கின்றனர். மேலும் வெள்ளிக்கிழமை தினத்தில் தீக்குண்டம் இறங்குகின்றனர்.

தீ குண்டம் இறங்கிய பிறகு ஞாயிற்றுக்கிழமை ஹெத்தையம்மனை வனப்பகுதிக்குள் பாரம்பரியமாக வழிபாடு செய்யும் ஒரு தளத்திற்குச் சென்று அம்மனை அலங்கரித்து பூஜைகள் நடைபெறுகின்றன. அதன் பின் தடிகாரர்கள் என அழைக்கக்கூடியவர்கள், தெய்வத்தின் பாரம்பரியத் தடியை கையில் ஏந்தி அம்மனை அலங்கரித்து தங்கம், வெள்ளி நகைகளுடன் அம்மனைக் கோவில் பூசாரி தலையின் மீது தாங்கி நடந்து வருவார்.

அம்மனை பாதுகாப்பாக அழைத்து வரும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்த்து ஊர்வலமாக வருகை தருகின்றனர். இதற்கு முன்னதாக இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள ஆறு கொடையுடன் ஆறு ஊர் கிராம மக்கள் ஒன்றிணைந்து நடனமாடிப் பாடல் பாடி மகிழ்கின்றனர்.

இதையும் படிங்க: Road Safety Rules: மலை அழகை ரசிக்க ட்ரிப் போறிங்களா… அப்போ இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க…

ஏராளமான பக்தர்கள் பல்வேறு கிராமங்களிலிருந்து அம்மனைத் தரிசிக்க வருகின்றனர். வருகை புரியும் அனைவருக்கும் சிறப்பான அன்னதானமும் வழங்கப்படுகிறது. மேலும், அம்மன் ஊர்வலத்திற்குப் பிறகு கோவிலுக்கு வந்தவுடன் அனைவரும் காணிக்கை கட்டி வழிபாடு செய்கின்றனர். இவ்வளவு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் விரதத்தைத் துறந்து ஆடல் பாடல் என நடனமாடி மகிழ்கின்றனர்.

வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் திருவிழாவில் இறுதி நாளான இன்று சிறப்பாக நடைபெற்றது என மகிழ்கின்றனர் உள்ளூர் மக்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *