இது குறித்து அவரின் எக்ஸ்பிரஸ் பதிவில், “சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு முன்பாக, பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் உடல் முழுவதும் எரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
புளியந்தோப்பு பகுதியில் பட்டறை ஒன்றில் பணிபுரியும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்தான நிலவுவதாகக் கூறி ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் கூலித் தொழிலாளி அளித்த புகாரை ஏற்க மறுத்ததோடு, அவரைத் தரக்குறைவாக நடத்தியதே தற்கொலை முயற்சிக்கான முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
“மக்களின் குறைகளையும், துன்பங்களையும் போக்கி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறியிருப்பதே போன்ற துயரச் சம்பவங்கள் காவல்நிலையம் முன்பாகவே அரங்கேற காரணமாக அமைந்துள்ளது.
ஏற்கனவே, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் காவல்நிலைய சித்ரவதைகளும், மரணங்களும் அதிகரித்து வருவதாகச் சொல்லப்படும் சூழலில், தற்போது புகார் அளிக்க வருவோரையும் தொடர்ந்து தரக்குறைவாக நடத்தும் சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல்துறை மீதும் மக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன்பு நடைபெற்ற கூலித்தொழிலாளர் தற்கொலை முயற்சி தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே கிளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், கிரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs