இந்தாண்டின் பொங்கல் வெளியீடாக கார்த்தியின் ‘வா வாத்தியார்’ எதிர்பார்க்கப்பட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரசிகராக கார்த்தி நடித்திருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளார். சூர்யாவின் ‘ரெட்ரோ’ மே மாதம் முதல் தேதி வெளியாவதால், கார்த்தியின் படத்தை ஏப்ரலில் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு ‘சர்தார் 2’விற்குச் சென்றார் கார்த்தி. கார்த்தியின் நெருங்கிய நண்பரான பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் ‘சார்தார்’ முதல் பாகத்தைத் தயாரித்திருந்தார். இப்போது அவரே பார்ட் 2வையும் தயாரித்து வருகிறார். கார்த்தி இதில் ஏஜென்ட் சர்தார் சந்திரபோஸ், விஜய் பிரகாஷ் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.
படத்தின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா, கார்த்தியின் ஜோடிகளாக ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர். இவர்கள் தவிர ரஜிஷா விஜயனும் படத்தில் இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.