மின் மற்றும் ராணுவ வாகனங்களுக்கான பிரத்யேக டயர் தயாரிப்பில் எம்ஆர்எப் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
இதுகுறித்து பாரத் பிலிட்டி கண்காட்சியின்போது எம்ஆர்எப் நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அருண் மேமன் கூறியதாவது:
எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் சமீபத்தில் வெளியான மாருதி இவிட்டாரா உற்பத்தியாளர்களுக்கு டயர்களை தயாரித்து வழங்குவதன் மூலம், மின் வாகன (இவி) பிரிவில் ஒரு முக்கியமான இடத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம்.
எம்ஆர்எப் இவி டயர்கள் தனித்துவமான அம்சங்களுடன் வடிவமைக்கப்படுகின்றன. இது, பேட்டரி அளவு. காரின் அமைதியான செயல்பாட்டுக்காக சத்தங்களை உள்வாங்கும் வகையில் டயரின் உட்பகுதியில் “போம்” வைத்து பிரத்யேகமான வகையில் சில மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவி பிரிவில் மாற்று டயர்களுக்கான தேவையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பொதுவாக, பழைய இவி மாடல் மற்றும் 15,000-20,000 கி.மீ. வரை ஓடிய இவி வாகனங்கள் இந்த சந்தையில் முக்கிய பங்காகின்றன.
மேலும், பன்முக பயன்பாட்டுக்கான பிரத்யேக டயர்களை இந்திய ராணுவத்துக்கு தயாரித்து வழங்குவதிலும் எம்ஆர்எப் ஒற்றை நிறுவனமாக முன்னிலையில் உள்ளது.
இவ்வாறு அருண் மேமன் கூறினார்.