விளையாட்டு

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ‘டும் டும் டும்’… அவரின் மனைவி ஹிமானி மோர் யார் தெரியுமா?


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

நீரஜ் சோப்ரா திருமணம் | ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை திருமணம் செய்து கொண்டார்.

செய்தி18

ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை திருமணம் செய்து கொண்டார்.

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதனை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை நீரஜ் சோப்ரா கரம் பிடித்துள்ளார்.

யார் இந்த ஹிமானி மோர்?

ஹிமானி மோர் ஹரியானாவில் உள்ள லார்சௌலியைச் சேர்ந்தவர். சோனிபட்டில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் பயின்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அவர் கிழக்கு லூசியானா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி மோர், ஃபிராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர தன்னார்வ உதவி டென்னிஸ் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

மேலும் படிக்க: சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமித்தது ஏன்? தேர்வுகுழு தலைவர் அகர்கர் விளக்கம்..

அவர் தற்போது மெக்கார்மக் ஐசென்பெர்க் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் நிர்வாகத்தில் முதுகலை படிப்பதாகவும் சொல்லப்படுகிறது. திருமணம் குறித்த எந்த தகவலையும் நீரஜ் சோப்ரா வெளியிடாத நிலையில், தற்போது திருமண புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்நிலையில், நீரஜ் சோப்ராவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும், அது எங்கே நடந்தது என்று தான் சொல்ல முடியாது என்றும் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *