இந்தியா

பெண் மருத்துவர் கொலையில் சஞ்சய் ராய் குற்றவாளி: கொல்கத்தா நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு | பெண் மருத்துவரை கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பளித்தது


கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் நாளை வெளியிடப்பட உள்ளது.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் (31) கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

பெண் மருத்துவரின் கண்கள், உதடு, கழுத்து, வயிறு, தோள்பட்டை, விரல்கள், பிறப்பு உறுப்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இந்த கொடூர கொலை தொடர்பாக, காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

பெண் மருத்துவரின் கொடூர கொலைக்கு நீதி கோரி மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர். இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மருத்துவர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

பெண் மருத்துவர் கொலை வழக்கை முதலில் மேற்குவங்க போலீஸார் விசாரித்தனர். மாநில போலீஸாரின் விசாரணை குறித்து மருத்துவ மாணவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து மேற்குவங்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி பெண் மருத்துவர் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

மருத்துவ மாணவர்கள் சுமார் 50 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தினர். இதன்காரணமாக ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை தலைவர் சந்தீப் கோஷ் பதவி விலகினார். அவர் மீதும் அவரோடு தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மருத்துவ கல்லூரி நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். முதல்வர் மம்தா பானர்ஜி பலமுறை மருத்துவ மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சூழலில் பெண் மருத்துவர் கொலை வழக்கு மீதான விசாரணை கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. வழக்கில் 81 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 50 பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடு செய்யப்பட்டதாக மருத்துவ மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9-ம் தேதி அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி அனிபர் தாஸ் நேற்று தீர்ப்பை வழங்கினார். வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரம் நாளை வெளியிடப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

சட்ட வல்லுநர்கள் கூறுவது, “குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்” என்று கூறும்போது.

கதறி அழுத குற்றவாளி: பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது அவருக்கு கதறி அழுதார். அப்போது நீதிபதி அனிபர் தாஸ், சஞ்சய் ராய் இடையே நடந்த உரையாடல்கள் வருமாறு:

சஞ்சய் ராய்: நான் ருத்ராட்ச மாலை அணிந்துள்ளேன். நான் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் எனது ருத்ராட்ச மாலை அறுந்து விழுந்திருக்கும். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். என்னை வழக்கில் சிக்க வைத்துள்ளனர்.

அனிபர் தாஸ்: சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, சாட்சிகள், ஆதாரங்களின் அடிப்படையில் நீங்கள் (சஞ்சய் ராய்) குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நீதிபதி உள்ளார். உங்கள் தரப்பு வாதத்தை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம்.

கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை: என்னைப் பொறுத்தவரை முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க போலீஸார், சிபிஐ விசாரணை திருப்திகரமாக இல்லை. விசாரணை நீதிபதியின் தீர்ப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். தற்போது பிரதான குற்றவாளி மட்டுமே தண்டிக்கப்பட்டு உள்ளார். எனது மகளின் கொலையோடு தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டே இருப்பேன். எனக்கும் எனது குடும்பத்துக்கும் பொதுமக்களே ஆதரவு அளிக்க வேண்டும், பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்தார்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *