கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
புதுச்சேரியில் நடைபெற்ற கேரள முத்தப்பர் விழாவில் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து பள்ளிவேட்டை ஆடி அருள்வாக்கு வழங்கிய நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பரசின்னி கடவு முத்தப்பன் கோவில் உள்ளது. சிவபெருமானே இங்கு முத்தப்பனாக உள்ளார். சிவனும் சக்தியும் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து, மாந்திரீக நடனமாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுகின்றனர். கண்ணூர் மாவட்டம் புதுச்சேரியின் மாகி பிராந்தியத்தின் அருகில் உள்ளது. இதனால், மகி மக்களும் முத்தப்பனின் கோவிலுக்கு செல்வது வழக்கம். மேலும் புதுச்சேரியில் மலையாள ஆண்டுதோறும் பரம்பரிய முறைப்படி முத்தப்பனுக்கு விழா எடுத்து கொண்டாடுகின்றனர்.
இந்த ஆண்டு விழாவானது லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பூங்காவில் நடந்தது. தமிழ் மக்களின் குல தெய்வ வழிபாடு போல கேரள மக்கள் முத்தப்பன் திருவிழா நடைபெற்றது. திருவப்பன், வெள்ளாட்டம் ஆகிய 2 வேடங்களை அணிந்து சிவன், சக்தி பள்ளிவேட்டை ஆடி, பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும்நிகழ்ச்சி செண்டை மேளம் முழங்க நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற கேரள மக்கள் சாமியிடம் தங்களது கோரிக்கைகளை காதில்கூறி ஆசிப்பெற்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
புதுச்சேரி (பாண்டிச்சேரி), புதுச்சேரி, புதுச்சேரி (பாண்டிச்சேரி)
ஜனவரி 19, 2025 6:41 PM IST