உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடா்பாக மேலும் 10 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்கில் இதுவரை 70 போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர மாநில பிரதேசம், சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், முகலாய ஆட்சியாளர் பாபா கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்த ஆண்டு நவ. 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது. அப்போது துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்; பலா் காயமடைந்தனா்.
இதைத் தொடந்து, ஜாமா மசூதி நிா்வாகத்தினா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் சம்பல் மாவட்ட நீதிமன்றம் தொடா்ந்து விசாரணை நடத்தி இடைக்கால தடை விதித்ததோடு சம்பல் பகுதியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில, வன்முறை தொடா்பான விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினா், அப்பகுதி சிசிடிவி கண்காணிப்பு கேமராக் காட்சிகளையும், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வன்முறை குறித்து விடியோக்களையும் ஆய்வு செய்தனா். அதன் அடிப்படையில், முல்லா அஃப்ரோஸ், அசா அலி உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
கைது செய்யப்பட்டுள்ள அஃப்ரோஸ், வாகனம் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பலைச் சோந்தவா் என்றும் அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.