இதனையடுத்து அங்கு விரைந்த மேற்குவங்க காவல்துறையினர், அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. மேலும், கொல்லப்பட்டு கிடந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகியிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரியளவில் எடுக்கப்பட்டு போராட்டங்களும் நடந்தன.
இதற்கிடையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட 9-ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் தான் குற்றத்தை செய்தார் என்பதற்கு ஆதாரமாக செமினார் ஹாலில் இருந்த உடைந்த ப்ளூடூத்தை போலீசார் காண்பித்தனர். அந்த ப்ளூடூத் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் போனோடு இணைந்திருந்ததையும் போலீஸார் கண்டறிந்தனர்.
போலீஸாரால் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுகந்த் மஜும்தார் தெரிவித்தார். அதேபோல், இறந்த பெண்ணின் பெற்றோருக்கும் சுதந்திரமான விசாரணை வேண்டும் என மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ வாசம் ஒப்படைத்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சீல்டாவில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சஞ்சய் ராய்க்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
அதன்படி, 45 பக்கங்கள் கொண்ட அந்தக் குற்றப்பத்திரிகையில், பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் கூட்டு பாலியல் வன்கொடுமை என்று இல்லை. சஞ்சய் ராய் மட்டுமே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். குற்றம் நடந்த அந்த சமயத்தில் அவர் போதையில் இருந்துள்ளார்.
சி.சி.டி.வி. காட்சியில் 9-ம் தேதி சஞ்சய் ராய் செமினார் ஹாலில் காலை 4 மணிக்கு உள்ளே செல்வதும் 30 நிமிடங்கள் கழித்து வெளியே வருவதும் பதிவாகியுள்ளது.
பெண் மருத்துவர் உடலின் வெளிப்புறத்தில், 16 காயங்களும் உள்புறத்தில் 9 காயங்களும் இருந்தன. மேலும், நகத்தில் இருந்த ரத்தம் மற்றும் அவரது திசுக்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் சஞ்சய் ராய் டி.என்.ஏ.வுடன் ஒத்துப்போகிறது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனிபர்ன் தாஸ், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின்போது, தடயவியல் துறையின் ஆதாரங்களும், டி.என்.ஏ. மாதிரிகளின் ஆதாரங்களின் அடிப்படையில் சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதியாகக் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள் : ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த பெண்.. நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு வெளியானது
மேலும், குற்றவாளிக்கான தண்டனை விவரம் வரும் 20-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படும் நீதிமன்றம், அதிகப்பட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 18, 2025 3:32 PM IST
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை பாலியல் வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி; தண்டனை விவரம் எப்போது?