இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, விஷால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் சுந்தர் சி, ‘என்னுடைய பெயர் நல்ல இயக்குநர் என்ற பட்டியலில் வராதது வருத்தம்’ என்று பேசியிருக்கிறார்.
இது குறித்துப் பேசியிருக்கும் சுந்தர் சி, “13 ஆண்டுகளுக்குப் பின்னாடி இந்தப் படம் தியேட்டருக்கு வருது. ‘இவ்வளவு நாள் ஆச்சு..என்ன பெரிசா சாதிச்சிட போகுது’ அப்டினு நிறையபேர் பேசுனாங்க. ஆனா, இவ்வளவு பெரிய வரவேற்புக் கிடைச்சது ரொம்ப பெரிய விஷயம். வரும் என்னுடைய பெயர் நல்ல இயக்குநர் என்ற பட்டியலில் வராதது விஷால் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த வெற்றி விஷாலோட உழைப்புக்குச் சமர்ப்பணம்.