கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும் மக்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகை காரணமாக இந்த வாரம் செவ்வாய்க்கிழமை (14ம் தேதி) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை (19ம் தேதி) வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கலுக்கு நீண்ட விடுமுறை விடப்பட்டதால் சென்னையில் தங்கி பணிபுரியும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
தற்போது விடுமுறை முடிவதற்கு இந்த இரு தினங்களே உள்ளதால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப தயாராகி வருகின்றனர். பெரும்பாலும் விடுமுறையின் இறுதி நாளில் மக்கள் சென்னை திரும்புவது வழக்கம். அப்படி வரும்போது சென்னை அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
எனவே போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் ஒரே நாளில் சென்னை திரும்புவதை தவிர்க்குமாறு போக்குவரத்து துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
விடுமுறை முடிந்து, நாளை மறுதினம் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ஒரே நாளில் பொதுமக்கள் சென்னை திரும்பினால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
எனவே, நாளை மறுதினத்துக்குப் பதிலாக, இன்றும், நாளையும் சென்னைக்குப் புறப்படும் வகையில் பயணத் திட்டங்களை மாற்றியமைக்குமாறு பொதுமக்களை போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
ஜனவரி 17, 2025 6:28 PM IST