இயக்குநர் பேரரசு இயக்குநராக அறிமுகமான திரைப்படம் `திருப்பாச்சி’தான். அவருடைய ஊர் பெயர் கொண்ட படங்களின் ஹிட் வரிசையும் இப்படத்திலிருந்துதான் தொடங்கியது. விஜய்க்கும் இத்திரைப்படம் அப்போது பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. மாஸ் ஃபைட் சீன், அண்ணன் – தங்கை சென்டிமென்ட் என பல என்டர்டெயினிங் எலமென்ட்டுகள் கொண்ட `திருப்பாச்சி’, இப்போதும் பலரின் ஃபேவரிட் கமர்சியல் படங்களில் முக்கியமான இடத்தில் இருக்கிறது.
இத்திரைப்படத்தில் `பான் பராக்’ ரவி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடித்திருந்தார். அவருக்கு இத்திரைப்படம் அப்போது லைம் லைட்டுடன் ஒரு அடையாளத்தையும் தேடி தந்தது. 20 ஆண்டுகள் கடந்ததையொட்டி அவரிடம் பேசினோம்.