கிரிக்கெட்

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க விழா.. ரோஹித் சர்மா பங்கேற்பதாக தகவல்



கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானில் ரோஹித் சர்மா கடைசியாக 2008 இல் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மட்டும் பாகிஸ்தான் சென்று பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

8 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 19 ஆம் தேதி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்போட்டிகள் பாகிஸ்தானில் தொடங்குகின்றன.பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்ததால், இந்திய அணி மோதும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாம்பியன் கோப்பை தொடக்க விழா வரும் பிப்ரவரி 16 அல்லது 17 ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் மட்டும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு சென்று பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க – BCCI | மனைவிகளால் இந்திய வீரர்களுக்கு வந்த சிக்கல்.. பிசிசிஐ கொண்டு வந்த புதிய கட்டுப்பாடு!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *