விவசாயம்

இது இல்லாம பொங்கலா..? இறுதி அறுவடை கட்ட பணியில் விவசாயிகள்…


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

மஞ்சள் அறுவடை| திருவையாறு, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இந்தச் சாகுபடியை விவசாயிகள் அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர்.

எக்ஸ்

மஞ்சள்

மஞ்சள் கொத்து அறுவடை பணிகள்

தமிழர்களின் பாரம்பரிய தைப் பொங்கலை ஒட்டி, தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் மஞ்சள் கொத்து இறுதிக்கட்ட அறுவடைப் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் மாதத்தின் முதல் மாதமான தை ஒன்றாம் நாள் தொடங்கி தைத்திருநாள் மூன்று நாட்களுக்கு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் முதன்மையானது. புத்தாடை அணிந்து புதுப் பானையில், பச்சரிசி, பால், கரும்பு, வெல்லம் என நிறையப் பொருட்களைச் சேர்த்து பொங்கல் வைத்தாலும், முன்னதாகப் புதுப் பானையில் கோலமிட்டு மஞ்சள் கொத்தைப் பானையைச் சுற்றிக் கட்டி மங்களகரமாகப் பொங்கலை வைப்பது பண்டிகையின் முக்கிய சிறப்பு.

பொங்கல் பண்டிகைக்காக 10 மாதத்திற்கு முன்னரே பொங்கல் கரும்பை எப்படி விவசாயிகள் நடவு செய்கிறார்களோ, அதேபோல 6 மாதத்திற்கு முன்னதாகவே மஞ்சள் கொத்து பதியம் செய்வார்கள். பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, வாழை, இறுதி கட்டத்தை அடைந்த நிலையில் மஞ்சள் கொத்து அறுவடை தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் முழுவதும் விவசாயிகள் பரவலாக மஞ்சள் கொத்து சாகுபடி செய்து வந்தாலும்,

திருவையாறு, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இந்தச் சாகுபடியை விவசாயிகள் அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக திருவையாறு பகுதியில் மஞ்சள் அறுவடையில் ஈடுபட்ட விவசாயி இந்த ஆண்டு மஞ்சள் கொத்து சாகுபடி பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்ளலாம்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *