கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை இழந்துள்ள இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும், அதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.
2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்பது குறித்து பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 17 சீசன்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு மெகா ஏலம் நடத்தப்பட்டு ஒவ்வொரு அணிகளிலும் இடம்பெறும் வீரர்கள் இறுதி செய்யப்பட்டனர். இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு எப்போது தொடங்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.
இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவித்தார். முன்னதாக இந்த போட்டி மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் பரவின. இந்நிலையில் மார்ச் 23ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜு சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை இழந்துள்ள இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும், அதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.
அதன் பின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதனை முடித்துக் கொண்டு ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 12, 2025 5:46 PM IST