பேசத் தொடங்கிய ஆரவ், “ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இந்த ரேஸ் அஜித் சாரோட கனவு. அஜித் சார், இந்த ரேஸுக்காக திட்டமிட்டதுல இருந்து இப்போ வரைக்கும் நாங்க இருந்திருக்கோம். அதுல நாங்களும் பயணிச்சிருக்கோம். இந்த நிகழ்வுக்கு பின்னாடி அஜித் சாரோட ஆறு மாத உழைப்பு இருக்கு. அதனால இந்த நாள் அஜித் சாருக்கு, எங்களுக்கு, மொத்த அஜித்குமார் ரேஸிங் டீமுக்கும் ரொம்பவே முக்கியம் எனக்கும் அஜித் சாருக்கும் ஆட்டோமொபைல் ரொம்ப பிடிக்கும்.
அதனால சினிமாவை தாண்டி இந்த மாதிரியான விஷயங்கள் பேசுறதுக்கு அதிகமாக இருக்கும். எனக்கும் பைக் ரேஸ்ல கலந்துக்கணும்னு ரொம்பவே ஆசை இருந்தது. ஆனால், சினிமாவுக்கு வந்ததுக்குப் பிறகு உடலும், முகமும் ரொம்பவே முக்கியம். பைக் ரேஸ் இல்லைன்னாலும் கார் ரேஸ்ல கலந்துக்கணும்னு ஆசை இருக்கு. அடுத்த 3 வருஷத்துல நானும் இந்த மாதிரியான ரேஸ்ல கலந்துக்குவேன். ஏ.கே ரேசிங் டீமுக்கு சியர்ஸ்!” என்றார்