கிரிக்கெட்

‘ரோகித், கோலியின் சாதனைகளை மறந்துவிட்டார்கள்’ – விமர்சனங்களுக்கு யுவராஜ் சிங் பதிலடி



கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

விராட் கோலியின் பேட்டி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அவர் இந்த டெஸ்ட் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் மொத்தம் 190 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 24 ரன்களுக்கு குறைவாக உள்ளது.

செய்தி18

இந்திய அணிக்காக கோலியும் ரோகித்தும் செய்துள்ள சாதனைகளை மறந்துவிட்டு அவர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவதாக இந்திய அணியின் முன்னணி வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

துபாயில் நடைபெற்ற டென்னிஸ் பந்து கிரிக்கெட் பிரீமியர் லீக்கின் அறிமுக விழாவில் யுவராஜ் சிங் பங்கேற்றார். அப்போது பேட்டியளித்த அவர், ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தலைசிறந்த வீரர்கள் என்றார்.

கிரிக்கெட் வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அனைவரும் எளிதாக விமர்சித்துவிடுவதாக கூறிய யுவராஜ், அவர்களுக்கு ஆதரவு அளிப்பது தனது கடமை என்றார். மேலும் இந்திய அணி நிச்சயம் மீண்டும் வரும் என அவர் கூறினார்.

மேலும் அவர் கூறினார், இந்திய அணி கடந்த 5, 6 ஆண்டுகளில் சாதித்துள்ளது என்பதை நான் பார்க்கிறேன். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்தது. இது போன்று வேறு எந்த அணியும் செய்ததாக எனக்கு நினைவில்லை. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பலர் மோசமான கருத்துக்களை கூறுகின்றனர். ஆனால் அவர்கள் கடந்த காலத்தில் செய்த சாதனைகளை அனைவரும் மறந்துவிட்டார்கள். என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் முக்கிய காரணம் என விமர்சனங்கள் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க – ‘உள்ளூர் போட்டிகளை தவிர்க்கிறார்.. தவறுகளை திருத்திக் கொள்ளவில்லை’ – கோலியை விமர்சிக்கும் இர்பான் பதான்…

குறிப்பாக மூத்த வீரரான விராட் கோலியின் பேட்டி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அவர் இந்த டெஸ்ட் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் மொத்தம் 190 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 24 ரன்களுக்கு குறைவாக உள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *