கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
கடந்த முறையைப் போன்று இந்த முறையும் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் 18ஆம் தேதி மலேசியாவில் தொடங்குவதாக ஐசிசி தலைவர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் முதல் தொடர் தென்னாப்பிரிக்காவில் 2023ஆம் ஆண்டு நடந்தது. இதில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில் இரண்டாவது உலகக்கோப்பை போட்டிகள் வரும் 18 ஆம் தேதி மலேசியாவில் தொடங்குவதாக ஐசிசி தலைவர் ஜெய்ஷா அறிவித்துள்ளார், அது தொடர்பான புரோமோவையும் வெளியிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட 16 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.
சர்வதேச போட்டிகளில் விளையாடும் தேசிய அணிகள் தேர்வாகும் யு19 உலகக்கோப்பை தொடர் வீராங்கனைகளுக்கு முக்கியமாக கருதப்படுகிறது.
இன்று இந்திய அணியில் விளையாடும் முன்னணி வீராங்கனைகள் யு19 போட்டிகளில் இருந்து வந்தவர்கள் என்பதால், இந்த உலகக்கோப்பை தொடர் கவனம் பெற்றுள்ளது.
இரண்டாவது அரங்கேற்றம் @ஐசிசி பெண்கள் U19 @டி20 உலகக் கோப்பை மலேசியாவில் இந்த ஆண்டு கிரிக்கெட் நாட்காட்டியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும் #U19உலகக் கோப்பை. pic.twitter.com/RepBmY1POK
– ஜெய் ஷா (@JayShah) ஜனவரி 7, 2025
கடந்த முறையைப் போன்று இந்த முறையும் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
ஜனவரி 07, 2025 11:10 PM IST