எங்கம்மாவும், `ஒரு சாவித்திரி, சரோஜாதேவி மாதிரி ஒரு வாணி தான். நீ யாருக்கும் குறைச்சல் கிடையாது. இந்த கேரக்டரை வாணி இயக்கி மாதிரி யாரும் பண்ண முடியாதுன்னு நீ சொல்ல வைக்கணும்னு’ என்னை மோதிவேட் பண்றாங்க. நானும் யெஸ் சொல்லிட்டேன்.
அந்தப்படம் கமிட்டான உடனே என்னோட நடிப்பு, என்னோட ஃபிகர், என்னோட மேக்கப், என்னோட ஹேர்ஸ்டைல், என்னோட புடவை, என்னோட டான்ஸுனு எல்லாத்துலேயும் வித்தியாசம் காட்டணும்னு 24 மணி நேரமும் யோசிச்சிருக்கேன். டான்ஸெல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாடியே பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சுருட்டேன். அந்த நேரத்துல எனக்கு லவ் அஃபையர்ஸ் எதுவும் கிடையாது. போன்ல பேசிக்கிட்டே இருக்கிற பழக்கமும் என்கிட்ட இல்ல. சோ, என் நினைப்பு முழுக்க வசந்த மாளிகை, வசந்த மாளிகைதான்னு இருந்துச்சு.