கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
Fake ID –க்கும் அஸ்வினுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவி விட்டது. ரோகித் சர்மாவுக்கும் அவரது மனைவி ரித்திகாவுக்கும் கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அஹான் என்று பெயர் வைத்துள்ளனர்.
ரோகித் சர்மாவின் மனைவி என நினைத்து போலியான எக்ஸ் தள யூசரிடம் (Fake ID) கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாட்டிங் செய்தார். ஒரு கட்டத்தில் அவர் ரோகித் சர்மாவின் மனைவி அல்ல என்பதை சுதாரித்துக்கொண்டு தனது பதிவுகளை அவர் நீக்கிவிட்டார். இந்த சுவாரசிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா அடைந்த படுதோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் இழந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.
பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அவர் திறமையாக செயல்பட தவறிவிட்டார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் முதற்கொண்டு முன்னாள் வீரர்கள் வரை ரோகித் சர்மாவை சாடியுள்ளார். சமீபத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எக்ஸ் தளத்தில் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் குறித்து பதிவிட்டு இறந்தார்.
இதற்கு ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே (ரித்திகா சஜ்தே) ப்ரோபைலை போன்ற ஒரு கணக்கில் ஒருவர் பதில் அளித்தார். அவரது பதிலுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்ததால் உண்மையிலேயே அவர் ரோகித் சர்மாவின் மனைவிதான் என பலரும் நினைத்தனர். அந்த அக்கவுண்டிற்கு ரிப்ளை செய்த அஸ்வின், ‘ஹாய் ரித்திகா நலமாக உள்ளீர்களா? உங்களது குழந்தைக்கும், குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்’ என்று கூறியிருந்தார்.
அதன் பிறகு அந்த ரித்திகா சஜிதே அக்கவுண்டில் இருந்து நான் நன்றாக இருக்கிறேன் அஸ்வின் அண்ணா என்று பதில் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் உண்மையிலேயே ரோகித் சர்மாவின் மனைவியுடைய அக்கவுண்ட் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பதிவுகளை நீக்கிவிட்டார்.
இருப்பினும் அந்த Fake ID –க்கும் அஸ்வினுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவி விட்டது. ரோகித் சர்மாவுக்கும் அவரது மனைவி ரித்திகாவுக்கும் கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அஹான் என்று பெயர் வைத்துள்ளனர்.
மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஜனவரி 06, 2025 5:08 PM IST