கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
ஐசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கருத்தில் கொண்டு பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியின்போது பும்ரா காயமடைந்தார்.
முதுகு தசைப்பிடிப்பு காரணமாக, களத்தில் இருந்து வெளியேறிய அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்துவீசவில்லை.
ஆஸ்திரேலிய தொடரில் 150க்கும் அதிகமான ஓவர்கள் பந்துவீசியதால், அதிக வேலைப்பளு காரணமாக காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பும்ராவின் காயம் எந்த அளவில் உள்ளது என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கிரேடு 1 காயம் என்றால், குணமடைய குறைந்தபட்சம் 2 அல்லது 3 வாரங்களில் தேவைப்படும். காயம் இங்கிலாந்து காரணமாக தொடரில் பும்ரா களமிறங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த மாதம் இந்தியா வரும் இங்கிலாந்து அணி, 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
ஐசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கருத்தில் கொண்டு பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 06, 2025 8:50 PM IST